Sunday, November 19, 2023

Mudhal Mudhal Varum Sugam Song Lyrics in Tamil

 முதல் முதல் வரும் சுகம் பாடல் வாிகள்

Movie poster


SPB: முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது
VJ: முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது

SPB: முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது
VJ: முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது

SPB: உன்னை நானும் என்னை நீயும் உணர்ந்த பின்னாலே
உன்னைத் தொட்டு ஆடி மகிழ தடைகள் சொல்லாதே
VJ: மனதில் மனது சேர்ந்த போதும் மாலை வேண்டாமா
மாலை ஒன்று போட்ட பின்னால் மடியில் விழலாமே
SPB: பருவ காலத்தின் புதிய கனவுகள் காத்துக் கிடப்பதில் என்ன லாபம்
முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது
VJ: முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது…

VJ: இந்த அழகும் பருவ சுகமும் நிலைத்து நிற்காது
நெஞ்சில் வளரும் உண்மை அன்பு என்றும் மாறாது
SPB: அந்த உண்மை அறியும் உள்ளம் எனக்கு கிடையாதா
அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும் உனக்கு தெரியாதா
VJ: அதுவும் புரியுது இதுவும் தெரியுது காலம் கனியட்டும் அள்ளித்தருவேன்
SPB: முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது
VJ: முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது
SPB: முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது
VJ: முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது



Lyrics in English

SPB: Mudhal mudhal varum sugam Edhuvena ilamai ketkirathu
VJ: Mudhal iravinil varum sugamena Idhazhgal solgirathu

SPB: Mudhal mudhal varum sugam Edhuvena ilamai ketkirathu
VJ: Mudhal iravinil varum sugamena Idhazhgal solgirathu

SPB: Unnai naanum ennai neeyum Unarntha pinnaalae
Unnai thottu aadi magizha Thadaigal sollaathae
VJ: Manathil manathu saerntha pothum Maalai vendaamaa
Maalai ondru potta pinnaal Madiyil vizhalaamae
SPB: Paruva kaalaththin pudhiya kanavugal Kaaththu kidappathil enna labam
Mudhal mudhal varum sugam Edhuvena ilamai ketkirathu
VJ: Mudhal iravinil varum sugamena Idhazhgal solgirathu

VJ: Intha azhagum paruva sugamum Nilaiththu nirkaathu
Nenjil valarum unmai anbu Endrum maaraathu
SPB: Antha unmai ariyum ullam Enakku kidaiyaathaa
Adhuvum vendum idhuvum vendum Unakku theriyaathaa
VJ: Adhuvum puriyuthu idhuvum theriyuthu Kaalam kaniyattum allitharuvaen
SPB: Mudhal mudhal varum sugam Edhuvena ilamai ketkirathu
VJ: Mudhal iravinil varum sugamena Idhazhgal solgirathu
SPB: Mudhal mudhal varum sugam Edhuvena ilamai ketkirathu
VJ: Mudhal iravinil varum sugamena Idhazhgal solgirathu

Song Details

Movie name Kaalangalil Aval Vasantham
Director S.P. Muthuraman
Stars R. Muthuraman, Srividya, Chandrakala, Thengai Srinivasan
Singers SP. Balasubramaniyam, Vani Jairam
Lyricist Panju Arunachalam
Musician Vijaya Bhaskar
Year 1976

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***