Wednesday, February 3, 2021

Kanavu Kanden Kannaa Song lyrics in Tamil

 Kanavu Kanden Kannaa Song lyrics in Tamil

கண்ணா மணிவண்ணா முகுந்தா முராரே
கனவு கண்டேன் கண்ணா நீ கை கொடுத்தாய் மணிவண்ணா

கனவு கண்டேன் கண்ணா நீ கை கொடுத்தாய் மணிவண்ணா
மனமெனும் சோலையில் மலர் பறித்தேன் நான்
மனமெனும் சோலையில் மலர் பறித்தேன் நான்
மாலைகள் செய்து மணமுடித்தாய் நீ
மாலைகள் செய்து மணமுடித்தாய் நீ
கனவு கண்டேன் கண்ணா நீ கை கொடுத்தாய் மணிவண்ணா

பந்தல் மீதொரு கூந்தல் தோரணம் வாழைகள் ஆடிக் கண்டேன்
பாடும் மங்கல மேளம் தாளம் ஊர்வலம் போய்வரக் கண்டேன்
மாதர் கூட்டம் கைகள் தாங்கும் மஞ்சள் குங்குமம் கண்டேன்
மாலை சூடும் மங்கை நானுன் மாயக் கருணைக் கண்டேன்
ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே
ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே
கனவு கண்டேன் கண்ணா நீ கை கொடுத்தாய் மணிவண்ணா

தந்தை மகளை காளைக் கையில் தாரை வார்த்திடக் கண்டேன்
சொந்தம் சுற்றம் வாழிய என்றே மலர்கள் தூவிடக் கண்டேன்
பாதி நிலாவில் பஞ்சணை மீது நாணம் பொங்கிடக் கண்டேன்
பாலும் பழமும் கண்டேன் அதில் பரந்தாமன் உனைக் கண்டேன்
கனவு கண்டேன் கண்ணா நீ கை கொடுத்தாய் மணிவண்ணா

Song Details

Movie Name Paadha Poojai
Director A. Bhimsingh
Stars Sivakumar, Jayachitra, Jaya, V.S. Raghavan, V.K. Ramasamy, Venniradai Moorthy, Manorama, Sukumari
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician ???
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***