Saturday, January 16, 2021
Mannargal Vanangum Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/16/2021
Mannargal Vanangum Song lyrics in Tamil
பாரதத்தில் புத்த மதம் வேரூன்றி இருந்த காலம்
பாடலிபுத்திரத்தில் ஒரு ஆடலரசி
அங்கங்கள் திரண்டிருந்த அழகுச் சிலை வாசவதத்த
மன்னர்கள் வணங்கும் சிலையானேன்
உள்ளங்கள் மயங்கும் கலையானேன்
கண்ணழகில் ஆசை கொண்டு கட்டிலுக்கு ஏக்கம் கொண்டு
எண்ணி எண்ணி போதை கொண்டு
மன்னர்கள் வணங்கும் சிலையானேன்
வாயிதழ் மதுரசத்தில் ஆட வைப்பேன்
வார்த்தெடுத்த கிண்ணங்களில் ஊறவைப்பேன்
மாயச் சுகங்களெல்லாம் மலர வைப்பேன்
மாயச் சுகங்களெல்லாம் மலர வைப்பேன்
மற்றொருத்தி இல்லையென்று பேச வைப்பேன்
மன்னர்கள் வணங்கும் சிலையானேன்
புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
அவர்கள் மன்னர்கள் என் அடிமைகள் இவனோ அழகானவன்
இவனைத் தேடி என் கண்கள் போகின்றன
தொடர்ந்து என் உள்ளமும் போகிறது ஏன் நானும் போனாலென்ன
காண வைத்தன கண்கள் உன் மேனியை
கண்டு கொண்டன வேதாந்த ஞானியை
ஆட வைத்தன ஆனந்தப் பெண்மையை
அறிந்து கொண்டன இன்பத்தின் உண்மையை
கண்களின் காட்சி பொய்யே
காதலும் பொய்யிற் பொய்யே
பெண்மையின் அழகும் பொய்யே
பேசிடும் மொழியும் பொய்யே
அழகிய மங்கை திருமுகம் கண்டு
அன்பு நிறைந்தொரு இன்பமடைந்து
பழகிய பஞ்சணை பால் பழம் உண்டு
பார்த்த பின்னால் வரும் ஞானமும் உண்டு
அழைக்கின்றேன் ஸ்வாமி அழைக்கின்றேன்
போகம் அழைக்கின்றது புத்தனுக்கு வேலையில்லை
மோகம் அழைக்கின்றது முனிவனுக்கு வேலையில்லை
காலம் அழைக்கட்டும் கண் திறந்து பார்க்கட்டும்
வருகின்றேன் பெண்மையே வருகின்றேன்
ஆடினாள் அவள் ஆடினாள் கோடை வசந்தமென்றும்
குளிரென்றும் மழையென்றும் ஓடிய காலங்கள் ஓடுவதறியாமல்
ஆடினாள் உளமாடினாள் உடலாடினாள் தானாடினாள் தள்ளாடினாள்
இளமை போய்விட்டது அழகு போய்விட்டது
யாரென்னைத் தேடுவார் இனி யாரென்னை தேடுவார்
புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
வெடித்த மலர் அழைத்தபோது வரவில்லையே ஸ்வாமி
விழுந்த மலர் காண்பதற்கு வந்ததேனோ
காதலைப் பொய் என்றேனே கவனிக்கவில்லை நீயே
அழகெல்லாம் பொய் என்றேனே அறியவும் இல்லை நீயே
பொய்யென்று அறியுமுன்னே போகிகள் வருவார் தாயே
பொய்யென்று அறிந்த பின்தான் ஞானிகள் வருவார் தாயே
புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
Lyrics in English
Bharathathil Putha Matham Verundri Iruntha Kaalam
Paadalipurathil Oru Aadalarasi
Angangal Thirandiruntha Azhagu Silai Vaasavathatha
Mannargal Vanangum Silaiyanen
Ullagal Mayangum Kalaiyanen
Kannazhagil Asai Kondu Kattiluku Yekkam Kondu
Enni Enni Pothai Kondu
Mannargal Vanangum Silaiyanen
Vaayidhah Madhurasathil Ada Vaipen
Vaarthedutha Kinnangalil Uravaipen
Maaya Sugallellam Malara Vaipen
Maaya Sugallellam Malara Vaipen
Mattoruthi Illaiyendru Pesa Vaipen
Mannargal Vanangum Silaiyanen
Putham Saranam Kachami
Sangam Saranam Kachami
Tharmam Saranam Kachami
Avargal Mannargal En Adimaigal Ivano Azhaganavan
Ivanai Thedi En Kangal Pogintrana
Thotranthu En Ullamum Pogirathu Yen Naanum Ponallenna
Kaana Vaithana Kangal Un Meniyai
Kandu Kondana Vethantha Gyniyai
Ada Vaithana Aanantha Penmaiyai
Arinthu Kondana Inbathin Unmaiyai
Kangalin Kaatchi Poiye
Kadhalum Poiyir Poiye
Penmaiyin Azhagum Poiye
Pesidum Mozhiyum Poiye
Azhagiya Mangai Thirumugam Kandu
Anbu Nirainthoru Inbamadainthu
Pazhagiya Panjanai Paal Pazham Undu
Paartha Pinnal Varum Gyanamum Undu
Azhaikindren Swamy Azhaikindren
Pogam Azhaikindrathu Puthanuku Velaiillai
Mohan Azhaikindrathu Munivanuku Velaiillai
Kaalam Azhaikattum Kann Thiranthu Paarkattum
Varukindren Penmaiye Varukindren
Aadinal Aval Aadinal Kodai Vasanthamendrum
Kulirendrum Mazhaiyendrum Odiya Kaalangal Oduvathariyamal
Aadinal Ulamaadinal Udaladinal Thaanadinal Thalladinal
Ilamai Poivittathu Azhagu Poivittathu
Yarennai Theduvar Ini Yaarennai Theduvar
Putham Saranam Kachami
Sangam Saranam Kachami
Tharmam Saranam Kachami
Veditha Malar Azhaithapothu Varavillaiye Swamy
Vizhuntha Malar Kaanpatharku Vanthatheno
Kadhalai Poi Endrene Kavanikavillai Neeye
Azhakellam Poi Endrene Ariyavum Illai Neeye
Poiyendru Ariyumunne Pogigal Varuvaar Thaaye
Poiyendru Arintha Pinthaan Gyanigal Varuvaar Thaaye
Putham Saranam Kachami
Sangam Saranam Kachami
Tharmam Saranam Kachami
Song Details |
|
---|---|
Movie Name | Anbu Thangai |
Director | S.P. Muthuraman |
Stars | R. Muthuraman, Jayalalithaa, Jaya, Srikanth, K.A. Thangavelu |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***