Monday, November 23, 2020

Petredutha Ullam Endrum Song lyrics in Tamil

Petredutha Ullam Endrum Song lyrics in Tamil

TMS: பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
ரத்தத்துடன் சேர்ந்ததந்தப் பாசம் பாசம்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்

TMS: அன்றொரு நாள் மன்னன் சாலமனுடைய சபையில்
ஒரு விசித்திரமான வழக்கு வந்தது
ஒரு பிள்ளை .இரண்டு தாய்மார்கள்
இரண்டு பேரும் அது தன்னுடைய பிள்ளை என்கிறார்கள்
பிள்ளைக்கோ தன் தாய் யாரென்று சொல்லத் தெரியவில்லை
மன்னன் சாலமன் யோசித்தான்

TMS: ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு
இரு தாய்க்கு ஒரு பிள்ளை வருவதுண்டோ
அசல் யாரோ .நகல் யாரோ
அசல் யாரோ .நகல் யாரோ அறியேனென்று
அதிசயித்த மன்னன் சொன்னான் முடிவில் ஒன்று முடிவில் ஒன்று

TMS: இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால்
யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை
ஆகவே காவலா இந்தப் பிள்ளையை ஆளுக்குப்
பாதியாகக் கொடு என்றான்
காவலன் சென்றான் இடை வாளை எடுத்தான்
அந்த மகனை இழுத்தான் வாளை ஓங்கினான்
வாளை ஓங்கினான்

PS: மன்னா மன்னா ஆஆ

PS: அம்மா என்றொரு குரலில் ஒரு பெண் கண்ணீர் வடிக்கின்றாள்
இன்னொரு பெண்ணோ வாளைக் கண்டும் புன்னகை புரிகின்றாள்
புன்னகை புரிகின்றாள்
பாதி கொடுங்கள் என்றே அவளோ மன்னனைக் கேட்கின்றாள்
மன்னா வேண்டாம் என்றே இவளோ மன்னனைத் தடுக்கின்றாள்
இந்தா என்றவன் அந்தப் பெண்ணிடம் மகனைத் தருகின்றான்
இவள் தான் உண்மைத் தாயென மன்னன் சாலமன் முடிக்கின்றான்
சாலமன் முடிக்கின்றான்

TMS: பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்

TMS: சக்தி வடிவானவளே அன்னை அன்னை
அவள் தானறிவாள் தான் வளர்த்த கண்ணை கண்ணை
Chorus: சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

TMS: பக்தியிலும் அன்னை தான் முதலில் தெய்வம்
இந்தப் பார் முழுதும் அவள் வளர்த்த செல்வம் செல்வம்
Chorus: சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

TMS: பதியம் வைத்த மரம் புதிய  தோட்டம்தனில் நின்று வாழ்வதுண்டு
புதியதாக வரும் உறவுயாவும் அதன் சொந்தமாவதில்லை
பதியம் வைத்த மரம் புதிய  தோட்டம்தனில் நின்று வாழ்வதுண்டு
புதியதாக வரும் உறவுயாவும் அதன் சொந்தமாவதில்லை
Chorus: சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

TMS: உதிரம் கொண்டு வரும் இதயம் போல ஒரு உண்மை அன்பு இல்லை
உருகும் உள்ளமென தமிழ் கூறுவது அன்னை என்ற சொல்லை
Chorus: சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

TMS: பூவும் மஞ்சளுடன் பொங்கும் தேவி அவள் புவனேஸ்வரி
Chorus: சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
TMS: பூஜை செய்து வரும் மாதர் காவல் தரும் ராஜேஸ்வரி
Chorus: சக்தி ஓம் சக்தி ஓம்
TMS: பாசம் பொங்கி வரும் தேவி சக்தி அவள் ஜெகதீஸ்வரி
Chorus: சக்தி ஓம் சக்தி ஓம்
TMS: பார்வை தன்னில் உயர் நீதி சொல்ல வரும் பரமேஸ்வரி
Chorus: சக்தி ஓம்  சக்தி ஓம்
TMS: புவனேஸ்வரி

TMS: பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்

Lyrics in English

TMS: Petredutha Ullam Endrum Deivam Deivam
Petredutha Ullam Endrum Deivam Deivam
Adhu Pesukindra Vaarthai Endrum Mounam Mounam
Rathathudan Sernthatha Pasam Pasam
Adhu Naal Kadanthum Pillaiyudan Pesum Pesum
Adhu Naal Kadanthum Pillaiyudan Pesum Pesum

TMS: Andru Naal Mannan Saalamanudaiya Sapaiyil
Oru Visithiramana Vazhaku Vanthathu
Oru Pillai Iradu Thaimargal
Irandu Perum Adhu Thanudaiya Pillai Engirargal
Pillaiko Than Thaai Yarendru Solla Theriyavillai
Mannan Saalaman Yosithan

TMS: Oru Thaayaar Pala Pillai Peruvadundu
Iru Thaiku Oru Pillai Varuvadundo
Asai Yaro Nagal Yaro
Asai Yaro Nagal Yaro Ariyenendru
Adhisaitha Mannan Sonnan Mudivil Ondru Mudivil Ondru

TMS: Irandu Perume Idhu Than Pillai Enpathal
Yaridam Oppadaippathendru Theriyavillai
Agave Kavala Intha Pillaiyai Aalukku Paathiyaga Kodu Endran
Kavalan Sendran Idai Vaalai Eduthaan
Antha Maganai Izhuthaan Vaalai Onginan Vaalai Onginan

PS: Manna Manna Ah ah

PS: Amma Endroru Kuralil Oru Penn kanneer Vadikindral
Innoru Penno Vaalai Kandum Punnagai Purikindral
Punnagai Purikindral
Paathi Kodungal Endro Avalo Mannanai Ketkindral
Manna Veandam Endro Ivalo Mannanai Thadukindral
Indha Endravan Antha Pennidam Managai Tharukindran
Ival Thaan Unmai Thaiyena Mannan Saalaman Mudikindran
Saalaman Mudikindran

TMS: Petredutha Ullam Endrum Deivam Deivam
Adhu Pesukindra Vaarthai Endrum Mounam Mounam

TMS: Sakthi Vadivaanavale Annai Annai
Aval Thanarivaal Thaan Valartha Kannai Kannai
Chorus: Sakthi OM Sakthi OM Sakthi OM Sakthi OM

TMS: Bakthiyilum Annai Thaan Mudhalil Deivam
Intha Paar Muzhuthum Aval Valartha Selvam Selvam
Chorus: Sakthi OM Sakthi OM Sakthi OM Sakthi OM

TMS: Pathiyam Vaitha Maram Puthiya Thottamthanil Nintru Vazhvathundu
Puthiyathaga Varum Uravuyavum Adhan Sonthamavathillai
Pathiyam Vaitha Maram Puthiya Thottamthanil Nintru Vazhvathundu
Puthiyathaga Varum Uravuyavum Adhan Sonthamavathillai
Chorus: Sakthi OM Sakthi OM Sakthi OM Sakthi OM

TMS: Uthiram Kondu Varum Idhayam Pola Oru Unmai Anbu Illai
Urugul Ullamena Thamil Kooruvathu Annai Endra Sollai
Chorus: Sakthi OM Sakthi OM Sakthi OM Sakthi OM

TMS: Poovum Manjaludan Pongum Devi Aval Bhuvaneshwari
Chorus: Sakthi OM Sakthi OM Sakthi OM Sakthi OM
TMS: Poojai Seithu Varum Maathar Kaval Tharum Rajeshwari
Chorus: Sakthi OM Sakthi
TMS: Paasam Pongi Varum Devi Sakthi Aval Jagatheeswari
Chorus: Sakthi OM Sakthi
TMS: Paarvai Thannil Uyar Neethi Solla Varum Parameswari
Chorus: Sakthi OM Sakthi
TMS: Bhuvaneshwari

TMS: Petredutha Ullam Endrum Deivam Deivam
Adhu Pesukindra Vaarthai Endrum Mounam Mounam

Song Details

Movie name Kanna Nalama
Director K. Balachander
Stars Gemini Ganesan, Jayanthi, Major Sundarrajan, Kumari Padmini, M.R.R. Vasu, Manorama
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***