Friday, May 8, 2020

Aayi Mahamayi Song Lyrics in Tamil

Aayi Mahamayi Song Lyrics in Tamil

ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்
நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையால்
சமயபுரத்தாலே சாம்பிராணி வாசகியே
சமயபுரத்தை விட்டு சடுதியிலே வாருமம்மா

மாயி மகமாயி மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே அஸ்தான மாரிமுத்தே
மாயி மகமாயி மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே அஸ்தான மாரிமுத்தே

சிலம்பு பிறந்ததம்மா சிவலிங்க சாலையிலே
பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியில்
உடுக்கை பிறந்ததம்மா உருத்திராட்ச பூமியிலே
பாம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்
மாயி மகமாயி மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே அஸ்தான மாரிமுத்தே

பரிகாசம் செய்தவரை பதை பதைக்க வெட்டிடுவே
பரிகாரம் கேட்டு விட்டா பக்கத்துணை நீ இருப்பே
மேல்நாட்டு பிள்ளையிடம் நீ போட்ட முத்திரையை
நீ பார்த்து ஆத்தி வச்சா நாள் பார்த்து பூஜை செய்வான்
மாயி மகமாயி மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே அஸ்தான மாரிமுத்தே

குழந்தை வருந்துவது கோவிலுக்கு கேட்கலையோ
மைந்தன் வருந்துவது மாளிகைக்கு கேட்கலையோ
ஏழை குழந்தையம்மா எடுத்தோர்க்கு பாலனம்மா
உன் காலில் பணிந்துவிட்டான் தயவுடன் பாருமம்மா

கத்தி போல் வேப்பிலையாம் காளியம்மன் மருத்துவமாம்
ஈட்டி போல் வேப்பிலையாம் ஈஸ்வரியின் அருமருந்தாம்
வேப்பிலையில் உள்ளிருக்கும் வித்தைதனை யார் அறிவார்
ஆயா மனமிறங்கு என் ஆத்தா மனம் இறங்கு
அம்மையே நீ இறங்கு என் அன்னையே நீ இறங்கு

Lyrics in English

Aayi magamaayi aayiram kannudaiyaal
Neeli thirisooli neengaadha pottudaiyaal
Samayapuraththaalae Saambiraani vaasakiyae
Samayapuraththai vittu Sadudhiyilae vaarumammaa

Maayi magamaayi Mani manthira sekariyae
Enga aayi umaiyaanavalae Asthaana maarimuththae
Maayi magamaayi Mani manthira sekariyae
Enga aayi umaiyaanavalae Asthaana maarimuththae

Silambu piranthathammaa Sivalinga saalaiyilae
Pirambu piranthathammaa Pichaandi sannidhiyil
Udukkai piranthathammaa Uruthraatcha boomiyilae
Pambai piranthathammaa Palingu maa mandabaththil
Maayi magamaayi Mani manthira sekariyae
Enga aayi umaiyaanavalae Asthaana maarimuththae

Parigaasam seidhavarai Padhaipadhaikka vettiduvae
Parigaaram kettu vittaa Pakkaththunai nee iruppae
Melnaattu pillaiyidam Nee potta muththiraiyai
Nee paarththu aaththi vachaa Naal paarththu poojai seivaan
Maayi magamaayi Mani manthira sekariyae
Enga aayi umaiyaanavalae Asthaana maarimuththae

Kuzanthai varunthuvadhu Kovilukku ketkalaiyo
Mainthan varunthuvadhu Maaligaikku ketkalaiyo
Ezhai kuzhanthaiyammaa Eduththorkku baalanammaa
Un kaalil paninthu vittaan Dhayavudan nee paarumammaa

Kaththi pol veppilaiyaam Kaaliyamman maruththuvamaam
Eetti pol veppilaiyaam Eswariyin arumarunthaam
Veppilaiyil ullirukkum Vithaithanai yaar arivaar
Aayaa manamiranggu En aaththaa manam iranggu
Ammaiyae nee irangu En annaiyae nee iranggu

Song Details

Movie Aathi Parasakthi
Stars Gemini Ganesan, Jayalalitha, Padmini, R. Muthuraman, Vanisri, Sridevi, S. Varalakshmi, Rajasree, Venniradai Nirmala
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***