Wednesday, February 17, 2021

Nee Ennai Vittu Song lyrics in Tamil

 Nee Ennai Vittu Song lyrics in Tamil

நீ என்னை விட்டு போகாதே இந்தக் கன்னி மனம் தாங்காதே
நீ என்னை விட்டு போகாதே இந்தக் கன்னி மனம் தாங்காதே
விட்டுப் போனால் பட்டுப் பூவின் வண்ணம் யாவும் வாடிப் போகுமே

ஒரு கையில் கோப்பை மறு கையில் பாவை எடுத்துக் கொண்டாடு இனிமை பண்பாடு
காலம் பொன் போன்றது காதல் கண் போன்றது போனால் என்னாவது வாவா இன்றாவது
நீ என்னை விட்டு போகாதே இந்தக் கன்னி மனம் தாங்காதே
விட்டுப் போனால் பட்டுப் பூவின் வண்ணம் யாவும் வாடிப் போகுமே

சூரியன் தூங்கியது இங்கு சந்திரன் தோன்றியது
ஆயிரத்தில் நீயொருத்தன் தானே ஆசைக் கொண்டு தேர்ந்தெடுத்தேன் நானே
தித்திக்கின்ற முத்திரைகள் தேனே திகட்டும் வரைக்கும் திரும்பத் திரும்பத் தா
தத்தை சொல்லும் வித்தையெல்லாம் மெத்தை வந்தால் காணக் கூடுமே

பூப்பந்து போலிருக்கும் வண்ணப் பூந்துகில் மேலிருக்கும்
வானகத்து மேனகைக்குத் தங்கை வார்த்தெடுத்த ஓவியம் போல் மங்கை
இன்பமென்ற வெள்ளமூறும் கங்கை இரவு முழுவதும் உறவில் மிதக்கவா
ஒன்று தந்தால் நூறு தந்து நன்றி சொல்லும் நங்கை நானன்றோ
நீ என்னை விட்டு போகாதே இந்தக் கன்னி மனம் தாங்காதே
விட்டுப் போனால் பட்டுப் பூவின் வண்ணம் யாவும் வாடிப் போகுமே

Lyrics in English

Nee ennai vittu pogaadhae Indha kanni manam thaangaadhae
Nee yennai vittu pogaadhae Indha kanni manam thaangaadhae
Vittu ponaal pattu poovin Vannam yaavum vaadi pogumae

Oru kaiyil koppai Maru kaiyil paavai Eduthu kondaadu inimai panpaadu
Kaalam pon pondradhu Kaadhal kan pondradhu Ponaal ennaavadhu Vaa vaa indraavadhu
Nee yennai vittu pogaadhae Indha kanni manam thaangaadhae
Vittu ponaal pattu poovin Vannam yaavum vaadi pogumae

Sooriyan thoongiyadhu Ingu chandhiran thondriyadhu
Aayiratthil neeyoruthan thaanae Aasai kondu thaerndheduthaen naanae
Thithikkindra muthiraigal thaenae Thigattum varaikkum thirumba thaa
Thathai sollum vithaiyellaam Methai vandhaal kaana koodum

Poo pandhu polirukkum Vanna poondhugil maelirukkum
Vaanagathu maenagaikku thangai Vaarthedutha oviyam pol mangai
Inbamendra vellamoorum gangai Iravu muzhuvadhum uravil midhakka vaa
Ondru thandhaal nooru thandhu Nandri sollum nangai naanandro
Nee yennai vittu pogaadhae Indha kanni manam thaangaadhae
Vittu ponaal pattu poovin Vannam yaavum vaadi pogumae

Song Details

Movie Name Sirithu Vazha Vendum
Director S.S. Balan
Stars M.G. Ramachandran, Latha, Thengai Srinivasan
Singers L.R. Eswari
Lyricist Pulamaipithan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***