Saturday, January 9, 2021

Pallavi Ondru Song lyrics in Tamil

 Pallavi Ondru Song lyrics in Tamil

SJ: பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி
பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி
அனு பல்லவியைப் போல் அவனை வந்து சேரச் சொல்லடி
அனு பல்லவியைப் போல் அவனை வந்து சேரச் சொல்லடி
பாடுவேனடி என்றும் பாடுவேனடி பாடுவேனடி என்றும் பாடுவேனடி
சரணம் என்று நானும் வந்தேன் ஏற்க சொல்லடி
சரணம் என்று நானும் வந்தேன் ஏற்க சொல்லடி
அவன் சன்னதியில் எந்தன் நிலையை எடுத்து சொல்லடி
பாடுவேனடி என்றும் பாடுவேனடி பாடுவேனடி என்றும் பாடுவேனடி

PS: மீரா மீரா பாடிய பாடலைக் கேட்க கண்ணன் வரவில்லையோ
அந்த மங்கையின் பாடல் மன்னனுக்கேனோ மயக்கம் தரவில்லையோ
தஞ்சம் என்று நெஞ்சம் ஒன்று பாடுகின்றது
அது தன்னை காக்கும் தலைவன் நிழலை தேடுகின்றது
பாடுவேனடி என்றும் பாடுவேனடி பாடுவேனடி என்றும் பாடுவேனடி

PS: திங்கள் வந்து தழுவத்தானே வான் பிறந்தது
இசை தேனீ வந்து பருகத்தானே தேன் பிறந்தது
SJ: நல்ல கணவன் மாலை சூட நான் பிறந்தது
இந்த நங்கை எண்ணி ஏங்கும் அந்த நாள் பிறந்தது
பாடுவேனடி என்றும் பாடுவேனடி
Both: பாடுவேனடி என்றும் பாடுவேனடி

SJ: யாருக்கென்று யாரை அந்த தெய்வம் சேர்க்குமோ
அது இந்த நாளில் இங்கு நல்ல தீர்ப்பு கூறுமோ
Both: யாருக்கென்று யாரை அந்த தெய்வம் சேர்க்குமோ
அது இந்த நாளில் இங்கு நல்ல தீர்ப்பு கூறுமோ
SJ: நினைத்த வண்ணம் நெஞ்சிரெண்டை இணைத்து வைக்குமோ
நெடுநாட்கள் நானும் தேடுகின்ற நிழல் கிடைக்குமோ
Both: பாடுவேனடி என்றும் பாடுவேனடி பாடுவேனடி என்றும் பாடுவேனடி

Lyrics in English

SJ: Pallavi Ondru Mannan Ketka Paaduvenadi
Pallavi Ondru Mannan Ketka Paaduvenadi
Anu Pallaviyai Pol Avanai Vanthu Sera Solladi
Anu Pallaviyai Pol Avanai Vanthu Sera Solladi
Paaduvenadi Endrum Paaduvenadi Paaduvenadi Endrum Paaduvenadi
Saranam Endru Naanum Vanthen Yerka Solladi
Saranam Endru Naanum Vanthen Yerka Solladi
Avan Sannathiyil Enthan Nilaiyai Eduthu Solladi
Paaduvenadi Endrum Paaduvenadi Paaduvenadi Endrum Paaduvenadi

PS: Meera Meera Paadiya Paadalai Ketka Kannan Varavillaiyo
Antha Mangaiyin Paadal Mannanukeno Mayakam Tharavillaiyo
Thanjam Endru Nenjam Ondru Paadukintrathu
Athu Thannai Kaakum Thalaivan Nizhalai Thedukindrathu
Paaduvenadi Endrum Paaduvenadi Paaduvenadi Endrum Paaduvenadi

PS: Thingal Vanthu Thazuvathane Vaan Piranthathu
Isai Theani Vathu Parugathane Then Piranthathu
SJ: Nalla Kanavan Maalai Sooda Naan Piranthathu
Intha Nangai Enni Yengum Antha Naal Piranthathu
Paaduvenadi Endrum Paaduvenadi
Both: Paaduvenadi Endrum Paaduvenadi

SJ: Yaarukentru Yaarai Antha Deivam Serkumo
Athu Intha Naalil Ingu Nalla Theerpu Koorumo
Both: Yaarukentru Yaarai Antha Deivam Serkumo
Athu Intha Naalil Ingu Nalla Theerpu Koorumo
SJ: Ninaitha Vannam Nenjirendai Inaithu Vaikumo
Nedunaatkal Naanum Thedukindra Nizhal Kidaikumo
Both: Paaduvenadi Endrum Paaduvenadi Paaduvenadi Endrum Paaduvenadi

Song Details

Movie Name Sollathaan Ninaikkiren
Director K. Balachander
Stars Sivakumar, S.V. Subbaiah, Kamal Haasan, Jayachitra, Srividya, Shubha, Jayasudha
Singers P. Susheela, S. Janaki
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***