Sunday, December 13, 2020
Moothaval Nee Koduthai Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/13/2020
Moothaval Nee Koduthai Song lyrics in Tamil
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம் தமிழே
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்
மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன
மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன
தியாகத்தால் எமை வளர்த்த தெய்வம் கண்ட லாபமென்ன
மூத்தவள் நீ
தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம்
மண்ணிலே ஒருவரில்லை மங்கை உனக்கீடு சொல்ல
தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம்
மண்ணிலே ஒருவரில்லை மங்கை உனக்கீடு சொல்ல
என்னவோ நீ கிடைத்தாய் எல்லோர்க்கும் வாழ்வு தர
மூத்தவள் நீ
ஆணாக பிறந்திருந்தால் ராஜாங்கம் உனது கையில்
ஆணாக பிறந்திருந்தால் ராஜாங்கம் உனது கையில்
பெண்ணாக பிறந்து விட்டாய் நாங்கள் தான் உன் மடியில்
தன்மானம் காப்பவள் நீ சன்மானம் யார் தருவார்
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே அரங்கேற்றம்
மூத்தவள் நீ
கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவும் இல்லை
எத்தனை இரவு கண்டாய் என்ன நீ உறவு கண்டாய்
கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவும் இல்லை
எத்தனை இரவு கண்டாய் என்ன நீ உறவு கண்டாய்
கண்மூடும் வேளையிலும் எம்மை தான் கனவு கண்டாய்
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம் இளையவள் அரங்கேற்றம்
Lyrics in English
Moothaval Nee Koduthai Vazhvile Munnetram
Munnerum Vazhil Indru Ilaiyaval Aranketram Thamile
Moothaval Nee Koduthai Vazhvile Munnetram
Munnerum Vazhil Indru Ilaiyaval Aranketram
Megathaal Malai Pozium Megathuku Lapamenna
Megathaal Malai Pozium Megathuku Lapamenna
Thiyagathal Emai Valartha Deivam Kanda Lapamenna
Moothaval Nee
Thannaiye Theithutharum Santhanam Unthan Ullam
Mannile Oruvarillai Mangai Unakeedu Solla
Thannaiye Theithutharum Santhanam Unthan Ullam
Mannile Oruvarillai Mangai Unakeedu Solla
Ennavo Nee Kidaithaai Ellorkum Vazhvuthara
Moothaval Nee
Aanaga Piranthiruthal Rajangam Unathu Kaiyil
Aanaga Piranthiruthal Rajangam Unathu Kaiyil
Pennaaga Piranthuvittai Naangal Naan Un Madiyil
Thanmaanam Kaapaval Nee Sanmaanam Yaar Tharuvaar
Moothaval Nee Koduthai Vazhvile Aranketram
Moothaval Nee
Kalyana Sugamillai Kadamaiku Mudivum Illai
Ethanai Iravu Kandai Enna Nee Uravu Kandai
Kalyana Sugamillai Kadamaiku Mudivum Illai
Ethanai Iravu Kandai Enna Nee Uravu Kandai
Kannmoodum Velaielum Emmai Thaan Kanavu Kandai
Moothaval Nee Koduthai Vazhvile Munnetram
Munnerum Vazhil Indru Ilaiyaval Aranketram Ilaiyaval Aranketram
Song Details |
|
|---|---|
| Movie Name | Arangetram |
| Director | K. Balachander |
| Stars | Sivakumar, Prameela, S.V. Subbaiah, M.N. Rajam, Shashikumar, Kamal Haasan, Jayachitra, Jayasudha |
| Singers | P. Susheela |
| Lyricist | Kannadasan |
| Musician | V. Kumar |
| Year | 1973 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***