Thursday, October 29, 2020

Ponnazhagu Penmai Song Lyrics in Tamil

 Ponnazhagu Penmai Song Lyrics in Tamil

PS: பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை என்ன
ஒரு மந்திரமோ இல்லை தந்திரமோ
இந்த உலகம் எங்கள் அழகு பெண்கள் கை வசமோ
பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை என்ன
ஒரு மந்திரமோ இல்லை தந்திரமோ
இந்த உலகம் எங்கள் அழகு பெண்கள் கை வசமோ

PS: மேல் நாட்டின் எழில் ராணி விழி ஜாடையில்
நாடாளும் முடி வேந்தன் தடுமாறினான்
மேல் நாட்டின் எழில் ராணி விழி ஜாடையில்
நாடாளும் முடி வேந்தன் தடுமாறினான்
பால் போன்ற பனி பார்வை பார்த்தேங்கினான்
கால் மீது தலை வைத்து களைப்பாறினான்
பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை என்ன
ஒரு மந்திரமோ இல்லை தந்திரமோ
இந்த உலகம் எங்கள் அழகு பெண்கள் கை வசமோ

LRE: எழிலே உன் நிழல் கூட என்னை சேர்ந்தது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது
எழிலே உன் நிழல் கூட என்னை சேர்ந்தது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது
PS: பொன் வேந்தன் பூ மேனி என் மேனி தான்
என் மேனி எந்நாளும் உன் மேனி தான்
LRE: பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை என்ன
ஒரு மந்திரமோ இல்லை தந்திரமோ
PS: இந்த உலகம் எங்கள் அழகு பெண்கள் கை வசமோ

LRE: மலையில் தென்றல் பிறந்தது ஒருவருக்காகவா
Chorus: இங்கே வா அன்பே இங்கே வா
LRE: வானம் நிலவை சுமந்தது ஒருவருக்காகவா
Chorus: இங்கே வா அன்பே இங்கே வா
LRE: மேகம் மழையாய் பொழிந்தது ஒருவருக்காகவா
Chorus: இங்கே வா அன்பே இங்கே வா
LRE: இறைவன் அழகை படைத்தது ஒருவருக்காகவா
Chorus: இங்கே வா அன்பே இங்கே வா வா வா வா

Male ?: வடித்தெடுத்த சிலை போலே வடிவுடைய பாவை
துடித்தெழுந்த இளமையுடன் தோன்றுகின்ற அழகை
நடு சபையில் கடை விரித்து நடமாடும் பொழுது
அடுத்தவரை அழிப்பதுடன் தானும் அது அழியும்

PS: பெண் உலகம் பெருமை கொள்ளும் பொன் மகளே வா
உன் அழகினிலே ஒரு குறைவில்லையே
என்றும் அச்சம் நாணம் கொஞ்சும் பெண்மை வாழியவே

Lyrics in English

PS: Ponnazhagu penmai sinthum Punnagai enna
Oru manthiramo Illai thanthiramo
Intha ulagam engal Azhagu pengal kai vasamo
Ponnazhagu penmai sinthum Punnagai enna
Oru manthiramo Illai thanthiramo
Intha ulagam engal Azhagu pengal kai vasamo

PS: Mel naattin ezhil raani Vizhi jaadaiyil
Naadaalum mudi venthan Thadumaari naan
Mel naattin ezhil raani Vizhi jaadaiyil
Naadaalum mudi venthan Thadumaari naan
Paal pondra pani paarvai Paarththenginaan
Kaal meedhu thalai vaithu Kalaippaarinaan
Ponnazhagu penmai sinthum Punnagai enna
Oru manthiramo Illai thanthiramo
Intha ulagam engal Azhagu pengal kai vasamo

LRE: Ezhilae un nizhal kooda Enai chernthathu
Nee veru naan veru Yaar sonnathu
Ezhilae un nizhal kooda Enai chernthathu
Nee veru naan veru Yaar sonnathu
PS: Pon venthan poo meni En meni thaan
En meni ennaalum Un meni thaan
LRE: Ponnazhagu penmai sinthum Punnagai enna
Oru manthiramo Illai thanthiramo
PS: Intha ulagam engal Azhagu pengal kai vasamo

LRE: Malaiyil thendral piranthathu Oruvarukkaagavaa
Chorus: Ingae vaa anbae ingae vaa
LRE: Vaanam nilavai sumanthathu Oruvarukkaagavaa
Chorus: Ingae vaa anbae ingae vaa
LRE: Megam mazhaiyai pozhinthathu Oruvarukkaagavaa
Chorus: Ingae vaa anbae ingae vaa
LRE: Iraivan azhagai padaiththathu Oruvarukkaagavaa
Chorus: Ingae vaa anbae ingae vaa Vaa vaa vaa

Male ?: Vadiththedutha silaipolae Vadivudaiya paavai
Thudithezhuntha ilamaiyudan Thondrugindra azhagai
Nadu sabayil kadai virithu Nadamaadum pozhuthu
Aduthavarai azhippathudan Thaanum athu azhiyum

PS: Pen ulagam perumai kollum Pon magale vaa
Un azhaginilae Oru kuraivillaiyae
Endrum achcham naanam Konjum penmai vaazhiyavae

Song Details

Movie Name Rickshawkaran
Stars M.G. Ramachandran, Manjula, Padmini, Cho, Thengai Srinivasan
Singers P. Susheela. L.R. Eswari, Male Singer ?
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***