Saturday, October 31, 2020

Aadum Alaigalil Neendhi Song Lyrics in Tamil

Aadum Alaigalil Neendhi Song Lyrics in Tamil

ஆடும் அலைகளில் நீந்திக் கொண்டிருந்தான்  யமுனையிலே கண்ணன்
ஆயர் பாடியில் கோபியர் சூழ நடுவினிலே கண்ணன்
புல்லாங் குழலிசை மீட்டுவதில் தனை மறந்திருந்தான் கண்ணன்

புல்லாங் குழலிசை மீட்டுவதில் தனை மறந்திருந்தான் கண்ணன்
பூவையர் கோபியர் அன்பினிலே தன் மெய்மறந்தான் கண்ணன்

ஓடிய வெள்ளத்தின் வேகத்தில் கண்ணன் ஆடை நழுவியது
ஓவென சிரித்தார் கோபியர்
ஓவென சிரித்தார் கோபியர் கண்ணனை நாணம் தழுவியது நாணம் தழுவியது

கரை வழி வந்தாள் திரௌபதி
கரை வழி வந்தாள் திரௌபதி கண்ணன் கவலையை பார்க்கின்றாள்

சேலை முந்தானையை ஒரு புறம் எடுத்து ஓரத்தைப் பிரிக்கின்றாள்
தேவகி மைந்தனின் மானத்தை காக்க நீரினில் எறிகின்றாள் நீரினில் எறிகின்றாள்

கன்னி திரௌபதி என் மானத்தை காத்தாய் கண்ணன் நன்றி சொன்னேன் கண்ணன் நன்றி சொன்னேன்
காலமறிந்து உதவிக்கு வருவேன் நன்றிக்கு நன்றி சொல்வேன் நன்றிக்கு நன்றி சொல்வேன்

சூதாடி தோற்று விட்டான் பாண்டவ தருமன் அந்த தூயவளை ஆட்டத்தில் இழந்து விட்டான்
வாதாடும் அவைதனிலே கூந்தல் பற்றி  மாதவளை இழுத்து வந்தான் துரியன் தம்பி

கௌரவ குலத்தலைவன் துரியோதன் கட்டளை இடுகின்றான்
ஐவரின் முன்னிலையில் அவள் ஆடையைப் பறி என்றான்
அன்னை துடிக்கின்றாள் கொண்ட ஐவரைப் பார்க்கின்றாள்
தம்மை மறந்தவராய் ஐவர் தலைக் குனிந்திருக்கின்றார்

கண்ணா மணிவண்ணா தேவா தேவா
ஹரி ஹரி ஹரி ஹரி என்றாள் நன்றி சொல்வேன் என்றாய்
அந்த நாளும் இதுவல்லவோ இன்று வராவிடிலோ கண்ணா
இணையோர் துணை உண்டோ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா

தொடை மீது வாவென்ற துரியோதனா உந்தன் தொடைக் கீறி ரத்தம் எடுப்பேன்
துச்சாதனா உந்தன் பச்சை ரத்தம் கொண்டு கோதை என் கூந்தல் முடிப்பேன்
அன்னை பராசக்தி ஆணை மணம் கொண்ட ஐவரின் மீதிலே ஆணை
அன்புத் துணைக் கொண்ட மன்னன் பரந்தாமன் கண்ணனின் மீதில் ஆணை ஆணை ஆணை

பாரதப் போரில் வென்றதம்மா அந்த பாண்டவர் பெரும் சேனை
பார்த்திபன் கணையில் வீழ்ந்ததம்மா அந்த கௌரவர் குலத்தாணை
பீமன் கதையில் தொடையைப் பிளந்தான் துரியோதனன் தன்னை
வெற்றிக் கண்ணீர் மறைத்தது திரௌபதி  வேல் விழியாள் கண்ணை
வேல் விழியாள் கண்ணை

பாவி துச்சாதனன் ரத்தம் எடுத்து கூந்தல் முடிக்கின்றாள்
பரந்தாமன் முகம் பார்த்தே மறுபடி நன்றி உரைக்கின்றாள் நன்றி உரைக்கின்றாள்
பாரதப் போரில் வென்றதம்மா அந்த பாஞ்சாலி சரிதம்
பாவையின் கூந்தலில் மின்னுதம்மா அந்த பாஞ்சாலி சபதம் சபதம் சபதம்

Lyrics in English

Aadum alaigalil neendhi kondrunthaan yamunaiyile Kannan
Aayar Paadiyil Kopiyar Soola Naduvinile Kannan
Pullan kulalisai Meeduvathil thanai maranthan kannan

Pullan kulalisai Meeduvathil thanai maranthan kannan
Poovaiyar Kopiyar Anbinile than meimaranthan Kannan

Odiya Vellathil vegathil kannan aadai naluviyathu
Ovena sirithar kopiyar
ovena sirithar kopiyar kannanai naanam thazhuviyathu naanam thazhuviyathu

Karai vazhi vanthaal thorpathi
Karai vazhi vanthaal thorpathi kannan kavalaiyai paarkindral

Selai munthanaiyai oru puram eduthu orathai pirikindral
Devagi mainthanai maanathai kaaka neerinil erikintral neerinil erikintral

Kanni Thorpathi en maanathai kaathaai kannan nantri sonnen kannan nantri sonnan
Kaalamarinthu uthaviku varuven nantriku nantri solven nantriku nantri solven

Soothadi thottru vittan paantava tharuman antha thooyavalai aattathil ilanthu vittan
Vaathadum avaithaile koonthal pattri maathavalai iluthu vanthan thuriyan thambi

Kovrava kulathalaivan thuriyothan kattalai idukintran
Iyvarin munnilaiyil aval aadaiyai pari entran
Annai thudikindral konda iyavarai paarkintral
Thammai maranthavarai iyvar thalai kuninthrirukintrar

Kanna Manivanna Deva Deva
Hari Hari Hari Hari entral nantri solven entrai
Antha naalum iduvallavo indru varavidilo kanna
Innaiyor thunai undo kanna kanna kanna kanna

Thodai Meedhu vaaventra thuriyothana unthan thodai keeri ratham edupen
Thuchana unthan pachai ratham kondu kodhai en Koothal mudipen
Annai Parasakthi aanai manam konda iyvari meethile aanai
Anbu thunai konda mannan paranthaman kannanin meethil aanai aanai aanai

Bharatha poril ventrathamma antha paandavar perum senai
Paarthipan kanaiyil vizhinthathamma antha kovravar kulathaanai
Beeman kathaiyil thodaiyai pilanthan thuriyothanan thannai
Vetri kanneer maraithu thorpathi vel vizhiyal kannai
Vel vizhiyal kannai

Paavi thuchathanan ratham eduthu koonthal mudikindral
Paranthaman mugam paarthe marupadi nantri uraikkintral nantri uraikkintral
Bharatha poril ventrathamma antha banjali saritham
Paavaiyin koonthalil minnuthamma antha panjaliyin sapatham sapatham sapatham

Song Details

Movie Name Sabatham
Stars K.R. Vijaya, Ravichandran, Nagesh, T.K. Bhagavathy, Anjali Devi
Singers S. Janaki
Lyricist Kannadasan
Musician G.K. Venkatesh
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***