Saturday, March 21, 2020

Kannizhantha Manithar Munne Tamil Song Lyrics in Tamil

Kannizhantha Manithar Munne Tamil Song Lyrics in Tamil

PS: கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார் பாடல் இசைத்தார்
AMR: கண்ணிருந்தும் ஓவியத்தை காட்டி மறைத்தார்
இரு காதிருந்தும் பாதியிலே பாட்டை முடித்தார் பாட்டை முடித்தார்

PS: ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு தடையை விதித்தார்
ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு தடையை விதித்தார்
காய்ந்துவிட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார்
பண்ணறியா மனிதர் முன்னே வீனையை வைத்தார்

AMR: பண்ணறிந்தும் மீட்டும் முன்னே யாழை பறித்தார் யாழை பறித்தார்
PS: கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
AMR: கண்ணிருந்தும் ஓவியத்தை காட்டி மறைத்தார் காட்டி மறைத்தார்

PS: பெண் பெருமை பேசி பேசி காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால் பெண்ணை அழிப்பார்
பெண் பெருமை பேசி பேசி காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால் பெண்ணை அழிப்பார்
AMR: முன்னும் இல்லை பின்னும் இல்லை முடிவும் இல்லையே
மூடர் செய்த விதிகளுக்கு தெளிவும் இல்லையே
PS: கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார் பாடல் இசைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார் பாடல் இசைத்தார்

Lyrics in English

PS: Kannizhandha manidhar munnae oeviyam vaiththaar
Kannizhandha manidhar munnae oeviyam vaiththaar
Iru kaadhillaadha manidhan munnae paadal isaiththaar paadal isaiththaar

AMR: Kannirundhum oviyaththai kaatti maraiththaar
Iru kaadhirundhum  paadhiyilae paattai mudiththaar paattai mudiththaar

PS: Aada vandha maedaiyilae mullai valarththaar
Anaikka vandha karangalukku thadaiyai vidhiththaar
Aada vandha maedaiyilae mullai valarththaar
Anaikka vandha karangalukku thadaiyai vidhiththaar
Kaaindhuvitta maraththinilae kodiyai inaiththaar
Thaavi vandha paingiliyin siragai odiththaar
Pannariyaa manidhar munnae veenaiyai vaiththaar

AMR: Pannarindhum meettum munnae yaazhai pariththaar yaazhai pariththaar
PS: Kannizhandha manidhar munnae oviyam vaiththaar
AMR: Kannirundhum oeviyaththai kaatti maraiththaar kaatti maraiththaar

PS: Penn perumai paesi paesi kaalam kazhippaar
Than perumai kulaiyum endraal pennai azhippaar
Penn perumai paesi paesi kaalam kazhippaar
Than perumai kulaiyum endraal pennai azhippaar
AMR: Munnum illai pinnum illai mudivum illaiyae
Moodar seidha vidhigalukku thelivum illaiyae
PS: Kannizhandha manidhar munnae oviyam vaiththaar
Iru kaadhillaadha manidhan munnae paadal isaiththaar paadal isaiththaar
Kannizhandha manidhar munnae oviyam vaiththaar
Iru kaadhillaadha manidhan munnae paadal isaiththaar paadal isaiththaar

Song Details

Movie Aadiperukku
Stars Geminiganesan, Saroja Devi
Singers A.M. Raja, P. Susheela
Lyrics Kannadasan
Musician A.M. Raja
Year 1962

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***