Monday, January 20, 2020
Kannil Therikindra Vaanam Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/20/2020
Kannil Therikindra Vaanam Song lyrics in Tamil
LRE: கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ
கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ
கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ
TMS: பொன்னழகு பெண் முகத்தில் கண் விழுந்தால் என்னாகும்
பொன்னழகு பெண் முகத்தில் கண் விழுந்தால் என்னாகும்
பொன்னாகும் பூவாகும் தள்ளாடும்
செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும்
LRE: சிவந்த மலர்கள் சிரிக்கும் அழகு நினைவில் எத்தனை சிந்தும்
TMS: கொடுக்கும் கரங்கள் துடிக்க துடிக்க எடுத்து முடிக்க சொல்லும்
மலர் கிள்ளலாம் கையில் அள்ளலாம்
கதை சொல்லலாம் வண்ண கன்னமெல்லாம்
இன்னுமென்ன வந்து விடு சொல்லிவிடு சொல்லிவிடு
செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும்
LRE: அருவி விழுந்து நதியில் நடந்து கடலில் கலந்ததென்ன
TMS: பருவம் மலர்ந்து மடியில் விழுந்து பழகும் கதையை சொல்ல
LRE: நதி வந்தது TMS: கடல் கொண்டது
LRE: சுவை கண்டது TMS: என்ன சொந்தம் இது
LRE: கொஞ்ச வரும் வஞ்சியரின் நெஞ்சமிது
ஆட வந்தேன் மேடையிலே ஆடி விட்டேன் உன் மனதில்
TMS: ஆடுவதை காண வந்தேன் ஆடவைத்தேன் உன் மனதை
Both: கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ
கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ
கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ
Lyrics in English
LRE: Kannil therigindra vaanam kaigalil varaatho
Thulli thirigindra megam thottu thazhuvaatho
Kannil therigindra vaanam kaigalil varaatho
Thulli thirigindra megam thottu thazhuvaatho
Katti anaikkindra meni pattoli kollaatho
Katti anaikkindra meni pattoli kollaatho
TMS: Ponnazhagu penmugaththil kanvizhunththaal ennaagum
Ponnazhagu penmugaththil kanvizhunththaal ennaagum
Ponnaagum poovaagum thallaadum
Senggani mangaiyar meedhu sevvari vandaadum
Senggani mangaiyar meedhu sevvari vandaadum
LRE: Sivantha malargal sirikkum azhagu Ninaivil ethanai sindhum
TMS: Kodukkum karanggal thudikka thudikka eduthu mudikka sollum
Malar killalaam Kaiyil allalaam kathai sollalaam vanna kannamellaam
Innumenna vanthu vidu sollividu sollividu
Senggani mangaiyar meedhu sevvari vandaadum
Senggani mangaiyar meedhu sevvari vandaadum
LRE: Aruvi vizhunthu nathiyil nadanthu kadalil kalanththathenna
TMS: Paruvam malarnthu madiyil vizhunthu pazhagum kathaiyai solla
LRE: Nathi vanthathu TMS: Kadal kondathu
LRE: Suvai kandathu TMS: Enna sontham ithu
LRE: Konjavarum vanjiyarin nenjamithu
Aada vanthen medaiyilae aadivitten unmanathil
TMS: Aaduvathai kaanavanthen aadavaiththen unmanathai
Both: Kannil therigindra vaanam kaigalil varaatho
Thulli thirigindra megam thottu thazhuvaatho
Katti anaikkindra meni pattoli kollaatho
Katti anaikkindra meni pattoli kollaatho
Song Details |
|
---|---|
Movie | Ragasiya Police 115 |
Singers | T.M. Soundarajan, L.R. Eswari |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***