Friday, January 1, 2021

Nillappa Konjam Nillappa Song lyrics in Tamil

 Nillappa Konjam Nillappa Song lyrics in Tamil

நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா
நான் கேட்கும் கேள்விக்கு நீயாச்சும் சிந்திச்சு சொல்லப்பா பதில் சொல்லப்பா
நான் கேட்கும் கேள்விக்கு நீயாச்சும் சிந்திச்சு சொல்லப்பா பதில் சொல்லப்பா
நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா

அய்யய்ந்து ஆண்டாச்சு யார்யாரோ ஆண்டாச்சு ஹரிசன முன்னேற்றம் என்னாச்சு
அது தேங்கிய நீராட்டம் நின்னாச்சு
அய்யய்ந்து ஆண்டாச்சு யார்யாரோ ஆண்டாச்சு ஹரிசன முன்னேற்றம் என்னாச்சு
அது தேங்கிய நீராட்டம் நின்னாச்சு 
அந்த ஹரிசனம் பேர் சொல்லி கரிசனம் காட்டிய வெகுஜனம் முன்னேறி போயாச்சு
இந்த ஒரு இனம் தனியாக ஆயாச்சு
ஏனப்பா இது ஏனப்பா அட செல்லப்பா பதில் சொல்லப்பா

பள்ளுப்பறைகளும் படிக்கணும் என்று தான் பள்ளிக்கூடங்கள் உண்டாச்சு
தாழ்த்தப்பட்டோற்க்கு முதலிடம் என்றாச்சு
இந்த பயன் கொண்டு முன்னேறி பலன் கண்ட பேர்களை
விரல் கொண்டு எண்ணனும் வேலப்பா இந்த வேதனை ஏனென்று கேளப்பா
இந்த வேதனை ஏனென்று கேளப்பா
நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா

பள்ளுப்பறை என்று சொல்லக்கூடாதென்று  சட்டங்கள் போட்டாங்க ஏட்டிலே
பல சலுகைகள் தந்தாங்க நாட்டிலே ஆனால் எல்லார்க்கும் வழியிட்டு ஏறாமல் தான் மட்டும் இருக்கின்ற ஏணிப் போல் தேனப்பா
இந்த இனம் மட்டும் இருப்பது ஏனப்பா
நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா

அரசியல் சாசனம் ஆக்கி அளித்த நம் அம்பேத்கார் ஜாதியில் ஹரிசனம்
அவர் அறிவுக் களஞ்சியம் அறியணும்
அரசியல் சாசனம் ஆக்கி அளித்த நம் அம்பேத்கார் ஜாதியில் ஹரிசனம்
அவர் அறிவுக் களஞ்சியம் அறியணும்
இன்னும் அறியாரும் புரியாரும் சிறியாரும் பெரியாரும் கரடியாய் கத்தியும் என்னப்பா
அதை கருத்தினில் கொல்லாட்டி வீணப்பா
நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா

தன் சாதியில்லாமல் உன் ஜாதியில் வந்து  பெண்ஜாதி கொண்டானே குத்தமா
ஊர் பேசி ஒதுக்குது மொத்தமா
தன் சாதியில்லாமல் உன் ஜாதியில் வந்து  பெண்ஜாதி கொண்டானே குத்தமா
ஊர் பேசி ஒதுக்குது மொத்தமா
அவளை தொட்டாலும் தோஷம் கைப்பட்டாலும் பாவம் என கட்டோடு சொல்வது ஏனப்பா
இதை கட்டாயம் நீ யோசி தேனப்பா
நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா
நான் கேட்கும் கேள்விக்கு நீயாச்சும் சிந்திச்சு சொல்லப்பா பதில் சொல்லப்பா
சொல்லப்பா பதில் சொல்லப்பா

Lyrics in English

Nillappa Konjam Nillappa Nillappa Konjam Nillappa
Naan Ketkum Kelviku Neeyachum Sinthichu Sollappa Pathil Sollappa
Naan Ketkum Kelviku Neeyachum Sinthichu Sollappa Pathil Sollappa
Nillappa Konjam Nillappa

Aiainthu Aandachu Yaryaro Aandanchu Arishana Munnetram Ennachu
Athu Thengiya Neeratam Ninnachu
Aiainthu Aandachu Yaryaro Aandanchu Arishana Munnetram Ennachu
Athu Thengiya Neeratam Ninnachu
Antha Arishana Per Solli Kanisanam Kaatiya Vegujanam Munneri Poyachu
Intha Oru Inam Thaniyaga Aayachu
Yenappa Idhu Yenappa Ada Sollappa Pathil Sollappa

Palluparaikalum Padikanum Endru Thaan Pallikoodangal Undachu
Thaazthapattorku Muthalidam Endrachu
Intha Payan Kondu Munneri Palan Kanda Pergalai
Viral Kondu Ennanum Velappa Intha Vethanai Yendru Kelappa
Intha Vethanai Yendru Kelappa
Nillappa Konjam Nillappa

Palluparai Endru Sollakodathendru Sattangal Pottanga Yedile
Pala Salugaigal Thanthanga Naatile Aanal Ellorkum Valiyittu Yeramal Thaan Mattum
Irukindtra Yeni Pol Thenappa Intha Inam Mattum Irupathu Yenappa
Nillappa Konjam Nillappa

Arasiyal Sasham Aaki Alitha Nam Ambethkar Jathiyil Arishanam
Avar Arivu Kalajiyam Ariyanum
Arasiyal Sasham Aaki Alitha Nam Ambethkar Jathiyil Arishanam
Avar Arivu Kalajiyam Ariyanum
Innum Ariyarum Puriyarum Siriyarum Periyarum Kararidiyai Kathiyum Ennappa
Athai Karuthinil Kollatti Veenappa
Nillappa Konjam Nillappa

Than Sathiyillamal Un Jathiyil Vanthu Penjathi Kondadane Kuthama
Oor Pesi Othukuthu Mothama
Than Sathiyillamal Un Jathiyil Vanthu Penjathi Kondadane Kuthama
Oor Pesi Othukuthu Mothama
Avalai Thottalum Thosham Kaipattalum Paavam Ena Kattodu Solvathau Yeappa
Ithai Kattayam Nee Yosi Theappa
Nillappa Konjam Nillappa
Naan Ketkum Kelviku Neeyachum Sinthichu Sollappa Pathil Sollappa
Sollappa Pathil Sollappa

Song Details

Movie Name Nathayil Muthu
Director K.S. Gopalakrishnan
Stars K.R. Vijaya, R. Muthuraman, S.V. Subbaiah, S. Varalakshmi
Singers T.M. Soundararajan
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***