Wednesday, January 27, 2021
Kadhal Vilayada Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/27/2021
Kadhal Vilayada Song lyrics in Tamil
SPB: காதல் விளையாட கட்டிலிடு கண்ணே தூயமகனாட தொட்டிலிடு கண்ணே
காதல் விளையாட கட்டிலிடு கண்ணே தூயமகனாட தொட்டிலிடு கண்ணே
PS: எண்ணங்களின் இன்ப நடனம் கன்னங்கள் மீது அன்பு நிலை எழுதும்
காதல் விளையாட கட்டிலிடு கண்ணா தூய மகனாட தொட்டிலிடு கண்ணா
SPB: செந்தூர சிங்காரம் கொண்டாடும் பெண்ணுக்கு என் உள்ளம் சொர்க்கம் தரும்
செவ்வாயின் மீது ஊரும் தேனாற்றில் நானாட பொல்லாத வெட்கம் வரும்
PS: கண்ணோடு கண்ணோக்கி பண்பான பெண் கொண்ட காளைக்கு மோகம் வரும்
அன்பான மாப்பிள்ளை ஒன்றாகும் நேரத்தில் ஆசைக்குள் அச்சம் வரும்
SPB: மண்ணில் வரும் தங்கமலர்கள் பெண் கொண்ட காதல் பெருமை என எழுதும்
காதல் விளையாட கட்டிலிடு கண்ணே தூயமகனாட தொட்டிலிடு கண்ணே
PS: செவ்வானக் கோலங்கள் சீராட்டும் மேகங்கள் பொன்னூஞ்சல் போடட்டுமே
ஜில்லென்று பூங்காற்று பல்லாண்டு நாம் வாழ தென்பாங்கு பாடட்டுமே
SPB: நீராட்டு தீராமல் தேரோட்டும் புஷ்பங்கள் பாராட்டி பேசட்டுமே
நேராக கிள்ளைகள் ஆராத்தி தட்டோடு தாலாட்டு பாடட்டுமே
PS: என்றும் இது நின்று நிலவும் என் வாழ்க்கை வானம் இனிமையுடன் திகழும்
காதல் விளையாட
SPB: கட்டிலிடு கண்ணே
PS: தூயமகனாட
SPB: தொட்டிலிடு கண்ணே
Lyrics in English
SPB: Kadhal Vilayada Kattilidu Kanne Thuyamaganada Thottilidu Kanne
Kadhal Vilayada Kattilidu Kanne Thuyamaganada Thottilidu Kanne
PS: Ennangalin Inba Nadanam Kannangal Meethu Anbu Nilai Ezhuthum
Kadhal Vilayada Kattilidu Kanna Thuyamaganada Thottilidu Kanna
SPB: Senthoora Singaram Kondadum Pennuku En Ullam Sorkam Tharum
Seivayin Meethu Oorum Thenattril Nanada Pollatha Vetkam Varum
PS: Kannodu Kannoki Panpana Penn Konda Kalaiku Mogam Varum
Anbana Mappillai Ondragum Nerathil Asaiku Acham Varum
SPB: Mannil Varum Thangamalargal Penn Konda Kadhal Perumai En Ezhuthum
Kadhal Vilayada Kattilidu Kanne Thuyamaganada Thottilidu Kanne
PS: Sevvana Kolangal Seerattum Megangal Ponnunjal Potadume
Jillendru Poonkaatru Pallandu Naam Vazha Thenpaangu Paadatume
SPB: Neerattu Theerodum Pushpangal Paradi Pesadume
Neraga Killaigal Aarathi Thattodu Thaladu Paadadume
PS: Endrum Idhu Nidru Nilavum En Vazhkai Vanam Inimaiyudan Thigalum
Kadhal Vilayada
SPB: Kattilidu Kanne
PS: Thuyamaganada
SPB: Thottilidu Kanne
Song Details |
|
---|---|
Movie Name | Kanmani Raja |
Director | Devaraj, Mohan |
Stars | Sivakumar, Lakshmi, M.N. Rajam, Thengai Srinivasan, Manorama, Kumari Padmini |
Singers | S.P. Balasubramaniam, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
Super Song
ReplyDelete