Saturday, January 16, 2021

Aadi Vaa Azhagurani Song lyrics in Tamil

 Aadi Vaa Azhagurani Song lyrics in Tamil

கால் முழங்கால் முக்கால் அரைக்கால் கனுக்கால்
கை கை கை வலக்கை இடக்கை உடுக்கை
இடுப்பு உடுப்பு அணிவது சமைப்பது அடுப்பு தேவை நெருப்பு படகு துடுப்பு

பஞ்சு பூசும் மலர் அஞ்சும் வண்ணமிகு கஞ்ச மெல்லடிகள் ஆடவே
காந்தள் மென்மலர்கள் கைவிரல்கள் தமைக்கண்டு காடு வழி ஓடவே

கொண்ட திராட்சையது கொஞ்சி வந்து விழி தங்கி நின்றபடி அஞ்சுது
சிறுசிறு கொடியது இழையோடும் அசையுது அதிலொரு மலரணைக் கெஞ்சுது

ஆடிவா அழகுராணி
ஆடிவா அழகுராணி பாடுவேன் புதிய பாணி
திறமை எங்கே தெரியும் இங்கே
திறமை எங்கே தெரியும் இங்கே
ஆடிவா அழகுராணி

கோவில் சிலைகள் கோபுரமேறி கொஞ்சும் கனிகள் தேனிடை ஊறி
கோவில் சிலைகள் கோபுரமேறி கொஞ்சும் கனிகள் தேனிடை ஊறி
காதல் வழங்கும் பெண்ணென மாறி
காதல் வழங்கும் பெண்ணென மாறி கனிந்தது போல் சுகம் கலந்தது போலே
ஆடிவா அழகுராணி பாடுவேன் புதிய பாணி

கம்பனின் சீதை மிதிலையில் நின்று கண்ணோடு கண்ணினை கலந்தன என்று
செம்மணித் தமிழில் செப்பியதுண்டு சீதையை உனது சிந்தையில் கொண்டு

காலுக்குத் தோற்று விட்ட வாழைகள் கோடி
கட்டழகோடும் இடைப் பெட்டகம் ஆடி
காலுக்குத் தோற்று விட்ட வாழைகள் கோடி
கட்டழகோடும் இடைப் பெட்டகம் ஆடி
மேலுடை மூடி வரும் மேளங்கள் வாடி
மேலுடை மூடி வரும் மேளங்கள் வாடி
மெல்ல எனை அழைக்கும் நல்லதை நாடி
ஆடிவா அழகுராணி பாடுவேன் புதிய பாணி

மரங்களாட புவி நிலங்களாட மயில் இனங்களாட நடமாடுக
மழையினோடு முகில் நடனமாட இடி பதிகம் பாட நடமாடுக
கணைகள் போல புயல் அடிகள் போல கடல் அலைகள் போல நடமாடுக
இணையிலாத உடல் சுழலுமாறு தமிழ் இசையினோடு உறவாடுக
தந்தித்தோம் என ஆடுக
எமை சந்தித்தோம் என ஆடுக
தந்தோம் தோமென ஆடுக சுவை தந்தோம் நாமென ஆடுக
தித்தித்தாவெனத் துள்ளுக எமை தத்திக் கொள் எனச் சொல்லுக
தந்தோம் தோமென ஆடுக இதழ் தித்திக்கும் எனக் கூடுக
அவையிலாடுக மனதிலாடுக
அவையிலாடுக மனதிலாடுக உணர்விலாடுக உறவிலாடுக
சுவையுள்ள மதுரசம் இவையெனும்படி துள்ளி எழுந்திசை பாடுக நடமாடுக

Lyrics in English

Kaal Muzhankaal Mukkal Araikaal Kanukaal
Kai Kai Kai Valakai Idakkai Udukai
Iduppu Udupu Anivathu Samaipathu Adupu Thevai Neruppu Padagu Thuduppu

Panju Poosum Malar Anjum Vannamigu Kanja Melladigal Aadave
Kaanthal Menmalargal Kaiviralgal Thamaikandu Kaadu Vazhi Odave

Konda Thiratchaiyathu Konji Vanthu Vizhi Thangi Nintrapadi Anjuthu
Sirisiru Kodiyathu Izhaiyodum Asaiyuthu Athiloru Malaranai Kenjuthu

Aadivaa Azhagurani
Aadivaa Azhagurani Paaduven Puthiya Paani
Thiramai Enge Theariyum Inge
Thiramai Enge Theariyum Inge
Aadivaa Azhagurani

Kovil Silaigal Kopurameri Konjum Kanigal Thenidai Oori
Kovil Silaigal Kopurameri Konjum Kanigal Thenidai Oori
Kadhal Vazhangum Pennena Maari
Kadhal Vazhangum Pennena Maari Kaninthathu Pol Sugam Kalanthathu Pole
Aadivaa Azhagurani Paaduven Puthiya Paani

Kambanin Seethai Mithilaiyil Nintru Kannodu Kannanai Kalanthana Endru
Semmani Thamilil Seppiyathundu Sethaiyai Unathu Sinthaiyil Kondu

Kaaluku Thotruvitta Vazhaigal Kodi
Kattazhagodum Idai Pettagam Aadi
Kaaluku Thotruvitta Vazhaigal Kodi
Kattazhagodum Idai Pettagam Aadi
Meludai Moodi Varum Melangal Vaadi
Meludai Moodi Varum Melangal Vaadi
Mella Enai Azhaikum Nallathai Naadi
Aadivaa Azhagurani Paaduven Puthiya Paani

Marangalada Bhuvi Nilangalada Mayil Inangalada Nadamaada
Mazhainodu Mugil Nadamaada Idi Pathigam Paada Nadamaada
Kanaigal Pola Puyal Adigal Pola Kadal Alaigal Pola Nadamaaduga
Inaiyilatha Udal Sulalumaru Thamil Isaiyinodu Uravaduga
Thanthithom Ena Aaduga
Emai Santhithom Ena Aaduga
Thanthom Thomena Aaduga Suvai Thanthom Naamena Aaduga
Thanthithavena Thulluga Emai Thathi Kol En Solluga
Thanthom Thomena Aaduga Idhaz Thithikum En Kooduga
Avaiyilaaduga Manathiladuga
Avaiyilaaduga Manathiladuga Unarviladuga Uraviladuga
Suvaiyulla Madhurasam Ivaiennumpadi Thulli Ezhunthisai Paaduga Nadamaaduga

Song Details

Movie Name Anbu Thangai
Director S.P. Muthuraman
Stars R. Muthuraman, Jayalalithaa, Jaya, Srikanth, CID SAKUNTHALA, K.A. Thangavelu
Singers P. Susheela, L.R. Eswari
Lyricist Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***