Thursday, December 3, 2020

Naan Uyirukku Tharuvathu Song lyrics in Tamil

 Naan Uyirukku Tharuvathu Song lyrics in Tamil

நான் உயிருக்கு தருவது விலை
என் உடல் இனி உனக்கொரு கலை
கண்களை கொண்டு வா பெண்மையை காணவா
மங்கையில் தங்கம் நான் மதுவிலும் போதை நான்
கண்களை கொண்டு வா பெண்மையை காணவா

காதலுக்கு சொர்க்கம் என்று காவலுள்ள பக்கம் என்று
ஆடையிட்டு மூடி வைத்து பயன் என்ன
தேவையுள்ள சேவை என்று சேவலுக்கு பூஜை என்று
நாணமின்றி கொஞ்சுவதில் தவறென்ன
கூந்தலால் மூடுவேன் தேவைப்போல் ஆடுவேன்
கன்னி உன் கையிலே ஏஏஏ
கண்களை கொண்டு வா பெண்மையை காணவா

ஆடச் சொல்லி ஆடவில்லை பாடச் சொல்லி பாடவில்லை
தானாக வந்ததென்று தயங்காதே
கைகளுக்குள் கட்டுப்பட்டு காதலுக்கு பாதை விட்டு
கன்னி மனம் சொன்ன பின்பும் மயங்காதே
இரவிலே பகலையும் பகலிலே இரவையும் காணலாம் அருகில் வா ஆஆஆ
கண்களை கொண்டு வா பெண்மையை காணவா

பூவிருக்க மஞ்சமிட்டு தேன் எடுக்க உன்னை விட்டு
நானிருக்க வந்த பின்னும் தடை ஏனோ
கோப்பை ஒன்று கையிருக்க கோலமுள்ள பெண் இருக்க
வாழ்வதற்கு வேறு என்ன துணை வேண்டும்
என்னை நீ பார்க்கலாம் கண்ணை நான் கேட்கிறேன் காதலே வாழ்க நீ ஈஈஈ ஒஓஒ

நான் உயிருக்கு தருவது விலை
என் உடல் இனி உனக்கொரு கலை
கண்களை கொண்டு வா பெண்மையை காணவா
மங்கையில் தங்கம் நான் மதுவிலும் போதை நான்

Lyrics in English

Naan uyirukku tharuvadhu vilai
En udal ini unakkoru kalai
Kangalai kondu vaa Penmaiyai kaana vaa
Mangaiyil thangam naan Madhuvilum bodhai naan
Kangalai kondu vaa Penmaiyai kaana vaa

Kaadhalukku sorgam endru Kaavalulla pakkam endru
Aadai ittu moodi vaitthu payanenna
Thaevaiyulla sevai endru Saevalukku poojai endru
Naanamindri konjuvadhil thavarenna
Koondhalaal mooduven thaevai pol aaduven
Kanni un kaiyilae ae ae ae
Kangalai kondu vaa Penmaiyai kaana vaa

Aada cholli aadavillai Paada cholli paadavillai
Thaanaaga vandhadhendru thayangaadhae
Kaigalukkul kattuppattu Kaadhalukku paadhai vittu
Kanni manam sonna pinnum mayangaadhae
Iravilae pagalaiyum pagalilae iravaiyum
Kaanalaam arugil vaa aa
Kangalai kondu vaa Penmaiyai kaana vaa

Poo viritha manjam vittu Thaenedukka unnai vittu
Naanirukka vandha pinnum Thadai yaeno
Koppai ondru kaiyirukka kolamulla pennirukka
Vaazhvadharkku veru enna thunai vendum
Ennai nee paarkalaam kannai naan ketkiren
Kaadhalae vaazhga nee eee ooo

Naan uyirukku tharuvadhu vilai
En udal ini unakkoru kalai
Kangalai kondu vaa Penmaiyai kaana vaa
Mangaiyil thangam naan Madhuvilum bodhai naan

Song Details

Movie Name Raja
Director C.V. Rajendran
Stars Sivaji Ganesan, Jayalalithaa, K. Balaji
Singers L.R. Eswari
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***