Wednesday, December 30, 2020
Kanchiyile Oru Puthan Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/30/2020
Kanchiyile Oru Puthan Song lyrics in Tamil
SG: எங்கள் தமிழ் அன்னை எத்தனையோ தவமிருந்து
திங்களாய் செங்கதிராய் திருநாட்டின் ஒளி விளக்காய்
வள்ளுவன் குரல் போல வடிவமோ சிறிதாக
உள்ளமோ இந்த உலகினும் பெரிதாக
LRE: காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான் கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்
Both: காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான் கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்
LRE: அண்ணாவென்றே எல்லோரும் அழைக்க வந்தார் ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்
SG: அண்ணாவென்றே எல்லோரும் அழைக்க வந்தார் ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்
Both: அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
SG: எதையும் தாங்கும் இதயம் கொண்டு தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவு கொண்டு
எதையும் தாங்கும் இதயம் கொண்டு தன்னை எதிர்ப்பவர் மீதும் கனிவு கொண்டு
வைதவர் யாவரும் வாழட்டும் என்று வாழ்த்திய இதயம் அதுவல்லவா
Both: அது வள்ளுவன் காட்டிய வழியல்லவா
LRE: மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு என்றே சொல்லியவர்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு என்றே சொல்லியவர்
SG: கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான் தாரக மந்திரம் ஆக்கியவர்
Both: நம் தாழ்வுகள் எல்லாம் போக்கியவர்
அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
LRE: மானத்தை காத்திடும் நெசவாளர் அந்த மக்களின் கண்ணீர் தனைப் பார்த்தார்
SG: நாடெங்கும் துணிகளை தோள்களில் சுமந்து நலிந்திடும் ஏழைக்கு வாழ்வளித்தார்
Both: மக்கள் நலம் பெறவே ஒரு வழி வகுத்தார்
அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
SG: ஏழைகள் சிரித்திட அரசமைத்தார் அதில் இறைவனை காண்போம் என உரைத்தார்
எரிந்திடும் குடிசையில் வருந்திடுவோர்க்கு ஏரியா வீடுகள் அமைத்தளித்தார்
Both: அங்கு எரியும் விளக்காய் அவர் இருந்தார்
LRE: சென்னை என்றொரு பெயர் மாற்றி அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
சென்னை என்றொரு பெயர் மாற்றி அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி
SG: பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை பாரினில் மீண்டும் காட்டியவர்
நம் பழிகள் அனைத்தையும் மாற்றியவர்
Both: அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
SG: எல்லோர்க்கும் அண்ணனவன் இல்லார்க்கு செல்வமவன்
LRE: நல்லோர்கள் உள்ளமெல்லாம் நாள்தோறும் ஆளுபவன்
SG: சொன்னால் மனம் பதைக்கும் சொல்லவோ வாய் பதைக்கும்
தன்னந் தனிமையிலே தானுறங்க போனானோ
LRE: வங்கக் கடல் அலையே வாய்மூடி தூங்கும் எங்கள்
தங்கத் தமிழ் மகனை தாலாட்டி பாடினையோ
SG: பாடு நீ பாடு பைந்தமிழர் நாடென்று
ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே
ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே அமைதியிலே
Both: அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான் கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்
அண்ணாவென்றே எல்லோரும் அழைக்க வந்தார் ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார்
அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
Lyrics in English
SG: Engal Thamil Annai Ethanaiyo Thavamirunthu
Thingalai Sengathirai Thirunaatin Oli Vilakkai
Valluvan Kural Pola Vadivamo Sirithaga
Ullamo Intha Ulaginum Perithaga
LRE: Kanchiyile Oru Puthan Piranthan Konda Karunaiyinal Engal Nenjil Nirainthan
Both: Kanchiyile Oru Puthan Piranthan Konda Karunaiyinal Engal Nenjil Nirainthan
LRE: Annavena Ellorum Azhaika Vanthar Aayiram Thalaimurai Thazaika Vanthar
SG: Annavena Ellorum Azhaika Vanthar Aayiram Thalaimurai Thazaika Vanthar
Both: Anna Anna Anna Engal Anbin Deivam Anna
Anna Anna Anna Engal Anbin Deivam Anna
SG: Ethaiyum Thangum Idhayam Kondu Thannai Ethirpavar Meethu Kanivu Kondu
Ethaiyum Thangum Idhayam Kondu Thannai Ethirpavar Meethu Kanivu Kondu
Vaithavar Yavarum Vazhatum Endru Vazhthiya Idhayam Adhuvallava
Both: Adhu Valluvan Kaatiya Vazhiyallava
LRE: Maatran Thottathu Malligaikum Nalla Manamundu Endre Solliyavar
Maatran Thottathu Malligaikum Nalla Manamundu Endre Solliyavar
SG: Kadamai Kanniyam Kattupaatuthan Tharaga Manthiram Aakkiyar
Both: Nam Thazvugal Ellam Pokiyavar
Anna Anna Anna Engal Anbin Deivam Anna
LRE: Manathai Kaathidum Nesavalar Antha Makkalin Kanneerthanai Paarthar
SG: Naadengum Thunigalai Thozhgalil Sumanthu Nalinthidum Yezhaiku Vazhvalithar
Both: Makkal Nalam Perave Oru Vazhi Vaguthar
Anna Anna Anna Engal Anbin Deivam Anna
SG: Yezhaigal Sirithita Arasamaithar Adhil Iraivanai Kanpon Ena Uraithar
Erinthidum Kudisaiyil Varunthiduvorku Area Veedugal Amaithalithar
Both: Angu Eriyum Vilakai Avar Irunthar
LRE: Chennai Entroru Peyar Maatri Athai Senthamil Naadena Peyar Sooti
Chennai Entroru Peyar Maatri Athai Senthamil Naadena Peyar Sooti
SG: Bharathi Paadiya Painthamil Naatai Paarinil Meendum Kaatiyavar
Nam Pazhigal Anaithaiyum Maatriyavar
Both: Anna Anna Anna Engal Anbin Deivam Anna
SG: Ellorkum Annanavan Illarkku Selvamavan
LRE: Nallorgal Ullamellam Naalthorum Aalupavam
SG: Sonnal Manam Pathaikum Sollavo Vaai Pathaikum
Thananthanimaiyile Thaanuranga Ponano
LRE: Vanga Kadal Alaiye Vaaimoodi Thoongum Engal
Thanga Thamil Maganai Thalatti Paadinaiyo
SG: Paadu Nee Paadu Paithamilar Naatentru
Odi Ulaitha Magan Urankattum Amaithiyile
Odi Ulaitha Magan Urankattum Amaithiyile Amaithiyile
Both: Anna Anna Anna Engal Anbin Deivam Anna
Kanchiyile Oru Puthan Piranthan Konda Karunaiyinal Engal Nenjil Nirainthan
Annavena Ellorum Azhaika Vanthar Aayiram Thalaimurai Thazaika Vanthar
Anna Anna Anna Engal Anbin Deivam Anna
Song Details |
|
---|---|
Movie Name | Manipayal |
Director | A. Jagannathan |
Stars | A.V.M. Rajan, Jayanthi, Master Sekhar, Baby Indira, V.K. Ramasamy, Thengai Srinivasan, Manorama |
Singers | Seerkazhi Govindarajan, L.R. Eswari |
Lyricist | Pulamaipithan |
Musician | M.S. Viswanathan |
Year | 1973 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
Great.....great......
ReplyDeleteஅருமை
ReplyDelete