Tuesday, December 1, 2020

Adi Ennadi Rakkamma Sad Song lyrics in Tamil

 Adi Ennadi Rakkamma Sad Song lyrics in Tamil

அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு கண்ணீரில் நனையுதடி

கல்யாண மேளங்கள் மணியோசை என் கவலைக்கு தாளமடி
சொல்லாத எண்ணங்கள் பலகோடி என் துன்பத்தின் தீபமடி
பொன்னாக நான் நினைத்த மண்வீடு கரைந்து தண்ணீரில் கலந்ததடி
என் பட்டம் என் திட்டம் என் சட்டம் அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
காற்றாக பறந்ததடி

எல்லோர்க்கும் ஊர்கோலம் இரண்டுதரம் அதில் ஒரு கட்டம் முடிந்ததடி
தாயார்க்குப் பின்னாலே சம்சாரம் அது தடம் கொஞ்சம் புரண்டதடி
பண்பாடு காப்பதற்கு பெண் பார்த்து முடித்தேன் என் பாடு மயங்குதடி
என் வீடும் என் வாழ்வும் ஒரு கோயில் அடி ராக்கம்மா என் தெய்வம் சிரிக்குதடி
அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு  என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு கண்ணீரில் நனையுதடி

Lyrics in English

Adi Ennadi Rakkamma Ennenna Ninaipu En Nenju Kulunguthadi
Siru Kannadi Mookuthi Manika Sivabu Kanneeril Nanaiyuthadi

Kalyana Mealangal Maniyosi En Kavalaiku Thalamadi
Sollatha Ennangal Palakodi En Thupathin Deepamadi
Ponnaga Naan Ninaitha Mann Veedu Karainthu Thanneeril Kalanthathadi
En Pattam En Thittam En Sattam Adi Rakkamma Kaatraga Paranthathadi
Kaatraga Paranthathadi

Ellorkum Oorkolam Irandutharam Adhil Oru Kattam Mudinthathadi
Thaaiyarku Pinnale Samsaram Adhu Thadam Konjam Purandathadi
Panpaadu Kaapatharku Penn Paarthu Mudithen En Paadu Mayanguthadi
En Veedum En Vazhvum Oru Koyil Adi Rakkamma En Deivam Sirikuthadi
Adi Ennadi Rakkamma Ennenna Ninaipu En Nenju Kulunguthadi
Siru Kannadi Mookuthi Manika Sivabu Kanneeril Nanaiyuthadi

Song Details

Movie Name Pattikada Pattanama
Director P. Madhavan
Stars Sivaji Ganesan, Jayalalithaa, V.K. Ramasamy, M.R.R. Vasu, Manorama, Sukumari
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***