Sunday, November 29, 2020

Kalyanathula Melam Song lyrics in Tamil

 Kalyanathula Melam Song lyrics in Tamil

கல்யாணத்துல மேளம் அடிக்குது காசுக்காகவே காரியம் நடக்குது
கல்யாணத்துல மேளம் அடிக்குது காசுக்காகவே காரியம் நடக்குது
மாப்பிள்ளை என்னும் பேரிலே ஒரு பொம்மையைப் பாருங்க
இவர் வேட்டிக் கட்டும் பிள்ளைதானுங்க இப்ப சேலை கட்டி நிக்கிறாருங்க

ஓடுது பார் நல்ல படம்  ஓட்டுவது சின்னப்பொண்ணு
பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில் காசப் போடுங்க

அப்பாவுக்கு ராகம் போடும் மகனைப் பாருங்க
இந்த ஐயாவுக்கு தாளம் போடும் ஜால்ராப் பாருங்க
சொந்தப் புத்தி கொஞ்சம் இருந்தால் யோசிப் பாருங்க
இது சொல்வார் பேச்சைக் கேட்கும் புத்தி சொல்வது யாருங்க

ஏழை வீட்டுப் பொண்ணா இருந்தா பொம்பளை இல்லீங்க
அவ ஏழுமாடிப் பொண்ணாப் பொறந்தா மாப்பிள்ளை உண்டுங்க
கோழைக்கெல்லாம் மனசை வச்ச கடவுளைக் கேளுங்க
அவனைக் கொண்டு வந்து இங்கே வச்சு நியாயம் கேளுங்க
அப்பாவுக்கு மகனா இவரு தப்பாப் பொறந்த பொறப்பா இவரு
இப்போக் கூடப் புத்தியில்லேன்னா எங்கே போவாரு

Lyrics in English

Kalyanathula Melam Adikithu Kaasukagave Kaariyam Nadakuthu
Kalyanathula Melam Adikithu Kaasukagave Kaariyam Nadakuthu
Mapillai Ennum Perile Oru Pommaiyai Paarunga
Ivar Veati Kattum Pillai Thanunga Ippa Selai Katti Nikkirarunga

Oduthu Paar Nalla Padam Oduvathu Chinnaponnu
Potti Mele Kanna Podunga
Chinna Ponnu Kaiyil Kasa Podunga

Appavuku Ragam Podum Maganai Paarunga
Intha Iyyavuku Thalam Podum Jaalra Paarunga
Sontha Puthi Konjam Irunthal Yosipaarunga
Idhu Solvar Petchai Ketkum Puthi Solvathu Yarunga

Yelai Veettu Ponna Iruntha Pompalai Illinga
Ava Yezhumaadi Ponna Porantha Mappilai Undunga
Kozhaikellam Manasa Vacha Kadulai Kealunga
Avanai Kondu Vanthu Inge Vachu Niyayam Kealunga
Appavukku Magana Ivaru Thappap Porantha Porappa Ivaru
Ippok Koda Puthi Illana Enga Povaru

Song Details

Movie Name Needhi
Director C.V. Rajendran
Stars Sivaji Ganesan, Jayalalithaa, Sowcar Janaki, Manorama, M.R.R. Vasu
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***