Wednesday, April 1, 2020
Ulagam Ayiram Sollattume Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/01/2020
Ulagam Ayiram Sollattume Song Lyrics in Tamil
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே மனச பாத்துக்க நல்லபடி
உன் மனச பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே மனச பாத்துக்க நல்லபடி
உன் மனச பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி குணத்துக்குத் தேவை மனசாட்சி
உன் குணத்துக்குத் தேவை மனசாட்சி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
மயிலைப் பார்த்து கரடி என்பான் மானைப் பார்த்து வேங்கை என்பான்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பான் அதையும் சில பேர் உண்மை என்பான்
யானையைப் பார்த்த குருடனைப் போல் என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்
சிலர் என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
கடலில் விழுந்த நண்பனுக்கு கை கொடுத்தேன் அவன் கரை ஏற
கரைக்கு அவனும் வந்து விட்டான் கடலில் நான் தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்து விடும் சொல்லத் தானே வார்த்தை இல்லை
அதை சொல்லத் தானே வார்த்தை இல்லை
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே மனச பாத்துக்க நல்லபடி
உன் மனச பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
Lyrics in English
Ulagam aayiram sollattumae Unakku nee thaan needhipathi
Manidhan edhaiyo pesattumae Manasa paathukka nalla padi
Un manasa paathukka nalla padi
Ulagam aayiram sollattumae Unakku nee thaan needhipathi
Manidhan edhaiyo pesattumae Manasa paathukka nalla padi
Un manasa paathukka nalla padi
Ulagam aayiram sollattumae
Kadhai katta oruvan pirandhu vittaal Kannagi vaazhvilum kalangam undu
Kaappaatra sila paer irundhu vittaal Kalvargal vaazhvilum nyaayam undu
Courtukku thaevai sila saatchi Gunathukku thaevai manasaatchi
Un gunathukku thaevai manasaatchi
Ulagam aayiram sollattumae
Mayilai paarthu karadi enbaan Maanai paarthu vaengai enbaan
Kuyilap paartthu aandhai enbaan Adhaiyum sila paer unmai enbaan
Yaanaiyai paartha kurudanai pol Ennai paartthaal enna seiven
Silar ennai paarthaal enna seiven
Ulagam aayiram sollattumae
Kadalil vizhundha nanbanukku Kai koduthaen avan karai yaera
Karaikku avanum vandhu vittaan Kadalil naan thaan vizhundhu vitten
Solli azhudhaal theerndhu vidum Sollat thaanae vaarthai illai
Adhai sollat thaanae vaarthai illai
Ulagam aayiram sollattumae Unakku nee thaan needhipathi
Manidhan edhaiyo pesattumae Manasa paathukka nalla padi
Un manasa paathukka nalla padi
Ulagam aayiram sollattumae
Song Details |
|
---|---|
Movie | Arunodayam |
Stars | Sivajiganesan, Muthuraman |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1971 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***