Wednesday, March 25, 2020

Naan Alavodu Rasippavan Tamil Song Lyrics in Tamil

Naan Alavodu Rasippavan Tamil Song Lyrics in Tamil

TMS: நான் அளவோடு ரசிப்பவன்ன்ன் எதையும் அளவின்றிக் கொடுப்பவன்
அன்பின் அழகோடு தழுவி உறவோடு பழகி உயிராக நினைப்பவன்
நான் அளவோடு ரசிப்பவன்ன்ன் எதையும் அளவின்றிக் கொடுப்பவன்
அன்பின் அழகோடு தழுவி உறவோடு பழகி உயிராக நினைப்பவன்

PS: மதுவோடு வந்து இதழ் தேடி இதமோடு தந்து இணையாகி
மதுவோடு வந்து இதழ் தேடி இதமோடு தந்து இணையாகி
பிரிந்தாலும் உள்ளம் பிரியாமல் வாழ யார் சொல்லித் தந்ததோ
நான் உனக்காகப் பிறந்தவள் உந்தன் நிழல் போலே தொடர்ந்தவள்
உன்னை ஒருபோது தழுவி மறுபோது உருகி தனியாகத் துடிப்பவள்

TMS: கன்னம் செந்தாமரை சிந்தும் முத்தம் செந்தேன் மழை
கண்கள் இன்பக்கடல் குரல்தான் கொஞ்சும் புல்லாங்குழல்
மங்கை பொன்னோவியம் பேசும் மழலைச் சொல்லோவியம்
PS: கனிவான நெஞ்சில் உருவான கவிதை என்னென்று சொல்லவோ
TMS: நான் அளவோடு ரசிப்பவன்ன்ன் எதையும் அளவின்றிக் கொடுப்பவன்
அன்பின் அழகோடு தழுவி உறவோடு பழகி உயிராக நினைப்பவன்

PS: தொட்டுத் தீராததோ கைகள் பட்டும் ஆறாததோ
விட்டு செல்லாததோ இளமை வேகம் பொல்லததோ
கட்டுப் படாததோ உள்ளம் காவல் இல்லாததோ
TMS: நிழலோடு வந்து குளிர் சேர இன்னும் நாள் பார்ப்பதென்னவோ
PS: நான் உனக்காகப் பிறந்தவள் உந்தன் நிழல் போலே தொடர்ந்தவள்
உன்னை ஒருபோது தழுவி மறுபோது உருகி தனியாகத் துடிப்பவள்

TMS: முல்லைச் செண்டாகவே உன்னை மெல்லப் பந்தாடவோ
அல்லித் தண்டாகவே ஒடியும் இடையைத் தொட்டாடவோ
தொட்டில் நீயாகவே ஆடும் பிள்ளை நானாகவோ
PS: எனதென்ற யாவும் உனதான பின்பு நான் என்ன சொல்வதோ
TMS: நான் அளவோடு ரசிப்பவன்ன்ன் எதையும் அளவின்றிக் கொடுப்பவன் அன்பின் அழகோடு தழுவி உறவோடு பழகி உயிராக நினைப்பவன்

Lyrics in English

TMS: Naan alavaodu rasippavannn Edhaiyum alavindri koduppavan
Anbin azhagodu thazhuvi Uravodu pazhagi Uyiraaga ninaippavan
Naan alavaodu rasippavannn Edhaiyum alavindri koduppavan
Anbin azhagodu thazhuvi Uravodu pazhagi Uyiraaga ninaippavan

PS: Madhuvodu vandhu idhazh thaedi Idhamodu thandhu inaiyaagi
Madhuvodu vandhu idhazh thaedi Idhamodu thandhu inaiyaagi
Pirindhaalum ullam piriyaamal vaazha Yaar solli thandhadho
Naan unakkaaga pirandhaval Undhan nizhal polae thodarndhaval
Unnai oru podhu thazhuvi maru podhu urugi Thaniyaaga thudippaval

TMS: Kannam senthaamarai Sindhum mutham senthaen mazhai
Kangal inba kadal Kural thaam konjum pullaanguzhal
Mangai ponnoviyam Pesum mazhalai solloviyam
PS: Kanivaana nenjil uruvaana kavidhai Ennendru sollavo
TMS: Naan alavaodu rasippavannn Edhaiyum alavindri koduppavan
Anbin azhagodu thazhuvi Uravodu pazhagi Uyiraaga ninaippavan

PS: Thottu theeraadhadho Kaigal pattum aaraadhadho
Vittu chellaadhadho Ilamai vaegam pollaadhadho
Kattu padaadhadho Ullam kaaval illaadhadho
TMS: Nizhalodu vandhu kulir sera innum Naal paarppadhennavo
PS: Naan unakkaaga pirandhaval Undhan nizhal polae thodarndhaval
Unnai oru podhu thazhuvi maru podhu urugi Thaniyaaga thudippaval

TMS: Mullai sendaagavae Unnai mella pandhaadavo
Alli thandhaagavae Odiyum idaiyai thottaadavo
Thottil neeyaagavae Aadum pillai naanaagavo
PS: Enadhendra yaavum unadhaana pinbu Naan enna solvadho
TMS: Naan alavaodu rasippavannn Edhaiyum alavindri koduppavan
Anbin azhagodu thazhuvi Uravodu pazhagi Uyiraaga ninaippavan

Song Details

Movie Engal Thangam
Stars M.G.R, J. Jayalalitha
Singers T.M. Soundarajan, P.Susheela
Lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***