Wednesday, January 29, 2020

Kodiyil Irandu Malar Undu Tamil Song lyrics in Tamil

Kodiyil Irandu Malar Undu Tamil Song lyrics in Tamil

TMS: கொடியில் இரண்டு மலருண்டு மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு எதிலும் புதுமை மணம் உண்டு
PS: கொடியில் இரண்டு மலருண்டு மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு எதிலும் புதுமை மணம் உண்டு

PS: கோடை வரும் வெய்யில் வரும் கோடைக்கு பின்னே மழையும் வரும்
கோபம் வரும் வேகம் வரும் கோபத்தின் பின்னே குணமும் வரும்
TMS: மேகங்களே மேகங்களே வான் மீதிலே உங்கள் தேரோட்டமா
வானம் என்னும் அன்னை தந்த பாசத்தினால் வந்த நீரோட்டமா
PS: கொடியில் இரண்டு மலருண்டு மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு எதிலும் புதுமை மணம் உண்டு

PS: கண்ணீரிலே தாலாட்டவும் கல்யாண பெண்ணாக சீராட்டவும்
அண்ணன் உண்டோ தந்தை உண்டோ எங்கள் அண்ணி என்னும் அன்னை அங்கே உண்டோ
TMS: பறவைகளே பறவைகளே பாசத்தை என் வீட்டில் பாருங்களேன்
அம்மா என்னும் தெய்வம் எம்மை அரசாளும் கோலத்தைக் காணுங்களேன்
Both: கொடியில் இரண்டு மலருண்டு மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு எதிலும் புதுமை மணம் உண்டு

Lyrics in English

TMS: Kodiyil irandu malar undu malaril paniyin thuliyundu
Paniyil kadhiravan oliyundu yedhilum pudhumai manam undu
PS: Kodiyil irandu malar undu malaril paniyin thuliyundu
Paniyil kadhiravan oliyundu yedhilum pudhumai manam undu

PS: Kodai varum veiyil varum kodaiku pinne mazhaiyum varum
Kopam varum vegam varum kopathin pinne kunamum varum
TMS: Megangale megangale vaan meethile ungal therotama
Vaanam ennum annai thantha paasathinaal vantha neerotama
PS: Kodiyil irandu malar undu malaril paniyin thuliyundu
Paniyil kadhiravan oliyundu yedhilum pudhumai manam undu

PS: Kanneerile thalaatavum kalyana pennaga seeratavum
Annan undo thanthai undo engal anni ennum annai ange undo
TMS: Paravaigale paravaigale paasathai en veetil paarungalen
Amma ennum deivam emmai arasalum kolathai kaanungalen
Both: Kodiyil irandu malar undu malaril paniyin thuliyundu
Paniyil kadhiravan oliyundu yedhilum pudhumai manam undu

Song Details

Movie Uyira Maanama
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***