Wednesday, January 29, 2020
Aathirathil Thudupeduthai Tamil Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/29/2020
Aathirathil Thudupeduthai Tamil Song lyrics in Tamil
ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய் அவசரத்தில் படகு விட்டாய்
காற்றினிலே சிக்கிக் கொண்டால் என்ன வரும் என் உயிரே
என் கண்ணீர் தான் அங்கேயும் காவல் வரும் என் உயிரே
கண்ணீர் தான் அங்கேயும் காவல் வரும் என் உயிரே
பாத்திரத்தின் நிறம் போலே பாலின் நிறம் மாறுவதோ
நேத்திரத்தை மறந்து விட்டு நீ எங்கே வாடுவதோ
கோடையிலே மர நிழலும் கோபத்திலே காதலியும்
ஆறுதலைத் தரவில்லையேல் யார் தருவார் என்னுயிரே
விளக்கினிலே நெருப்பு வைத்தால் வீடெல்லாம் ஒளியிருக்கும்
மனதினிலே நெருப்பு வைத்தால் வைத்தவரை எரிக்காதோ
சத்தியத்தை மறந்து விட்டால் தனி வழியே போக வரும்
தனி வழியே போனாலும் தலைவிதி தான் கூட வரும்
காட்டிலென்னை நிறுத்தி விட்டு காதவழி செல்கின்றாய்
காதவழி சென்றாலும் காதல் வழி மறவாதே
உன்னிடத்தில் ஆசையிலே நல்ல வழி நானுரைத்தேன்
என்னை நீ மறந்தாலும் சொன்ன மொழி மறவாதே
மறவாதே மறவாதே
Lyrics in English
Aathirathil thudupeduthai avasarathil padagu vittai
Kaatrinilea sikki kondal enna varum en uyire
En kanneer thaan angeyum kaval varum en uyire
Kanneer thaan angeyum kaval varum en uyire
Pathirathin niram pole paalin niram maaruvatho
Nethirathai maranthu vittu nee enge vaaduvatho
Kodaiyile mara nilalum kopathile kadhaliyum
Aaruthalai tharavillaiyel yar tharuvar ennuyrie
Vilakinile neruppu vaithaal veetellam oliyirukkum
Manathinile neruppu vaithaal vaithavarai erikaatho
Sathiyathai maranthu vittal thani vazhiye poga varum
Thani vazhiye ponalum thalai vithi thaan koda varum
Kaatilenna niruthi vittu kaadha vazhi selkintrai
Kaadhavazhi kadhal vazhi maravathe
Unnidathil asaiyile nalla vazhi nanuraithen
Ennai nee maranthalum sonna mozhi maravathe maravathe maravathe
Song Details |
|
---|---|
Movie | Uyira Maanama |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***