Wednesday, December 25, 2019
Athan Endren Muthu Muthaga Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/25/2019
Athan Endren Muthu Muthaga Song lyrics in Tamil
PS: நேரம் மாலை நேரம் நெஞ்சம் நெருங்கும் நெஞ்சம்
அத்தான் அத்தான் அத்தான் அத்தான் ஹும்
அத்தான் என்றேன் முத்து முத்தாக
அத்தான் என்றேன் முத்து முத்தாக
அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக
அம்மானும் பெண்மானும் ஒன்றோடு ஒன்றானோம்
ALR: நீலப்பட்டோடும் நெற்றி பொட்டோடும்
பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம்
நீலப்பட்டோடும் நெற்றி பொட்டோடும்
பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம்
அத்தான் என்றாய் முத்து முத்தாக
அள்ளிக்கொண்டேன் கட்டுக் கட்டாக
அம்மானும் பெண்மானும் ஒன்றோடு ஒன்றானோம்
ALR: கீதா இன்பக் கனவொன்று நானும் கண்டேன்
பொன்னிறமான அந்தி மாலை நேரம்
மேகம் கொஞ்சும் மலைச் சிகரம் அங்கு
பூச்சுடும் சிலையாக நின்றாய் அன்பே
பூமாலை சரமாக வந்தேன் அங்கே
பூச்சுடும் சிலையாக நின்றாய் அன்பே
பூமாலை சரமாக வந்தேன் அங்கே
பேச்சில்லை மூச்சில்லை பார்வையில்லை
பேசு என்றேன் யாரென்றாய் அத்தான் என்றேன்
PS: மனமே என்றேன் மறவேன் என்றாய்
அறிவே என்றேன் உறவே என்றாய்
அத்தான் என்றேன் முத்து முத்தாக
அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக
அம்மானும் பெண்மானும் ஒன்றோடு ஒன்றானோம்
PS: போதும் நிறுத்துங்கள் கன்னம் சிவக்காதா
இன்னும் கேளுங்கள் என் கனவை
நீராடும் துறையில் என் அருகே வந்தாய்
நீ காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன்
நீராடும் துறையில் என் அருகே வந்தாய்
நீ காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன்
தேரோடும் ராஜாங்கம் எதுவோ என்றாய்
திருநாளின் முதல் நாளில் அறிவாய் என்றேன்
ALR: இசையே என்றேன் இசையாய் நின்றாய்
மனமே என்றேன் வருவேன் என்றாய்
அத்தான் என்றேன் முத்து முத்தாக
அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக
BOTH: அம்மானும் பெண்மானும் ஒன்றோடு ஒன்றானோம்
Lyrics in English
PS: Athan Endren Muthu muthaga nerungum nenjam
athan athan athan anthan mmhum
athan entren muthu muthaga
athan entren muthu muthaga
allikkondai kattu kattaaga
ammaanum penmaanum ontrodu ontranoom
ALR: Neelapattodum netri pottodum
paruvam kontadum pathi kannoram
neelapattodum netri pottodum
paruvam kontadum pathi kannoram
athan entrai muthu muthaga
allikkondai kattu kattaaga
ammaanum penmaanum ontrodu ontranoom
ALR: Geetha inba kanavontru naanum kanden
ponniramaana anthi maalai neram
megam konjum malai sigaram angu
poojudum silaiyaga ninrai anbe
poomaalai saramaga vanthen ange
poojudum silaiyaga ninrai anbe
poomaalai saramaga vanthen ange
petchellai moojillai paarvaiyillai
pesu entren yarentrai anthan entren
PS: maname entren maraven entrai
arive entren urave entrai
athan entren muthu muthaga
allikkondai kattu kattaaga
ammaanum penmaanum ontrodu ontranoom
PS: Pothum niruthungal kannam sivakatha
innum kelungal en kanavai
neeradum duraiyil en aruge vanthai
nee kaanum poluthalla maraivaai entren
neeradum duraiyil en aruge vanthai
nee kaanum poluthalla maraivaai entren
thearodum rajankam yethuvo entrai
thirunaalin muthal naalil arivaai entren
ALR: Isaiye entren isaiyai nintrai
maname entren varuven entrai
athan entrai muthu muthaga
allikkondai kattu kattaaga
Both: ammaanum penmaanum ontrodu ontranoom
Song Details |
|
---|---|
Movie | Kallum Kaniyagum |
Singers | A.L. Raghavan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1968 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***