Thursday, October 10, 2019

Athai Magal Rathinathai Susheela Song lyrics in Tamil

Athai Magal Rathinathai Song lyrics in Tamil

அத்தை மகள் ரெத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ..ஹோ ஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹா ஆ
அத்தை மகள் ரெத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா

முத்து முத்து பேச்சு கத்தி விழி வீச்சு அத்தனையும் மறந்தாரா

முத்து முத்து பேச்சு கத்தி விழி வீச்சு அத்தனையும் மறந்தாரா
முன்னழகு தூங்க பின்னழகு எங்க பெண் அழகை விடுவாரா
பெண் அழகை விடுவாரா
முத்திரையை போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையை கெடுப்பாரா
முத்திரையை போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையை கெடுப்பாரா
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து முனிவரும் ஆவாரா
அத்தை மகள் ரெத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா

கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி தொட்டுவிட மனம் இல்லையா

கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி தொட்டுவிட மனம் இல்லையா
கட்டிலுக்கு பாதி தொட்டிலுக்கு பாதி கருணை வரவில்லையா
கருணை வரவில்லையா
விட்டு பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனா
விட்டு பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனா
மேடைகளில் நின்று தோழர்களை கண்டு சொல்லாமல் வருவேனா
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ..ஹோ ஹோ….ஓ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹா…ஆ
அத்தை மகள் ரெத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா

Lyrics in English

Aththai magal rethinathai Aththaan maranthaaraa
Anna nadai chinna idai Ellaam veruthaaraa
Oho oho oho oho Hoo…hoo hooo…ooo…
Oho oho oho oho Haa…aaa….haa..aaa…
Aththai magal rethinathai Aththaan maranthaaraa
Anna nadai chinna idai Ellaam veruthaaraa

Muthu muthu pechu Kathi vizhi veechu Athanaiyum marathaaraa

Muthu muthu pechu Kathi vizhi veechu Athanaiyum marathaaraa
Munnazhagu thoonga Pinnazhagu yenga Penn azhagai viduvaaraa
Penn azhagai viduvaaraa
Muththiraiyai pottu Chithirathai vaati Nithiraiyai keduppaaraa
Muththiraiyai pottu Chithirathai vaati Nithiraiyai keduppaaraa
Moovaasai veruthu Ooraarai maranthu Munivarum aavaaraa
Aththai magal rethinathai Aththaan maranthaaraa
Anna nadai chinna idai Ellaam veruthaaraa

Kottu muzhakkodu Kattazhagu meni Thottu vida manam illaiyoo

Kottu muzhakkodu Kattazhagu meni Thottu vida manam illaiyoo
Kattilukku paadhi Thottilukku paadhi Karunai varavillaiyaa
Karunai varavillaiyaa
Vittu pirinthaalum Etti nadanthaalum Kattaamal viduvenna
Medaigalil nindru Tholargalai kandu Sollamal varuvena
Oho oho oho oho Hoo…hoo hooo…ooo…
Oho oho oho oho Haa…aaa….haa..aaa…
Aththai magal rethinathai Aththaan maranthaaraa
Anna nadai chinna idai Ellaam veruthaaraa

Song Details

Movie Panakkara Kudumbam
Singers P. Susheela
lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1964

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***