Sunday, February 3, 2019

Avanukkenna Thoongi Vittan Song Lyrics in Tamil

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்

கைகளிலே போட்டு விட்டான்

இவனுக்கென்று எதை கொடுத்தான் எலும்புடனே சதை கொடுத்தான்

இதயத்தையும் கொடுத்துவிட்டு இறக்கும் வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க விட்டான்

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்

யானையிடம் நன்றி வைத்தான் காக்கையிடம் உறவு வைத்தான்
மான்களுக்கும் மானம் வைத்தான் மனிதனுக்கு என்ன வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான்

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான் ஆஆ
வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்
நாட்டில் உள்ள விஷத்தை எல்லாம் நான் குடிக்க விட்டுவிட்டான்
நான் குடிக்க விட்டுவிட்டான்

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
கைகளிலே போட்டு விட்டான்

Lyrics in English

Avanukenna thoonkivittan Agapattavan naan allava
Aiyirandu maadhathilae Kaigalilae potu vittan

Kaigalilae potu vittan

Ivanukendru Edhai koduthaan Elumbudanae sadhai Koduthaan

Idhayathaiyum Koduthuvitu irankum Varai thudika vittan
Irankum varai Thudika vittan

Avanukenna thoonkivittan Agapattavan naan allava
Aiyirandu maadhathilae Kaigalilae potu vittan

Yaanai idam Nandri vaithaan Kaakai idam Uravu vaithaan
Maangalukum Maanam vaithaan Manidhanuku Enna vaithaan
Manidhanuku Enna vaithaan

Avanukenna thoonkivittan Agapattavan naan allava
Aiyirandu maadhathilae Kaigalilae potu vittan
Kaigalilae potu vittan

Vaanil ulla Devargalai vaazhavaika Visham kudithaan

Naatil ulla Vishathai ellam Naan kudika vituvittan
Naan kudika vituvittan

Avanukenna thoonkivittan Agapattavan naan allava
Aiyirandu maadhathilae Kaigalilae potu vittan
Kaigalilae potu vittan

Song Details

Movie Year Singer Musician Lyricist
Periya Idathu Pen 1963 T.M.Soundarajan Viswanathan Ramamurthy Kannadasan

2 comments :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***