Wednesday, December 9, 2020
Irandu Manam Vendum Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/09/2020
Irandu Manam Vendum Song lyrics in Tamil
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால் அவளை மறந்துவிடலாம்
அவளை மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் குடித்துவிடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனது நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
இரண்டு மனம் வேண்டும்
சிறிய காயம் பெரிய துன்பம் ஆறும் முன்னே அடுத்த காயம்
சிறிய காயம் பெரிய துன்பம் ஆறும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போதும் உடலில் என்றால் மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும்
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
இரண்டு மனம் வேண்டும்
இரவும் பகலும் இரண்டானால் இன்பம் துன்பம் இரண்டானால்
இரவும் பகலும் இரண்டானால் இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால் ஆஆ
உறவும் பிரிவும் இரண்டானால் உள்ளம் ஒன்று போதாதே
இரண்டு மனம் வேண்டும்
கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி
கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளை தண்டிக்க என்ன வழி
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
இரண்டு மனம் வேண்டும்
Lyrics in English
Kudippatharkku oru manam irunthaal Avalai marandhu vidalaam
Avalai marappatharkku oru manam irunthaal Kudithu vidalaam
Aanal iruppatho oru manathu Naan enna seiven enna seiven
Irandu manam vendum Iraivanidam ketpen
Ninaithu vaada ondru Marandhu vaazha ondru
Irandu manam vendum Iraivanidam ketpen
Ninaithu vaada ondru Marandhu vaazha ondru
Irandu manam vendum
Siriya kaayam periya thunbam Aarum munbae adutha kaayam
Siriya kaayam periya thunbam Aarum munbae adutha kaayam
Udalil endraal marunthu pothum
Udalil endraal marunthu pothum Ullam paavam enna seiyum
Irandu manam vendum Iraivanidam ketpen
Irandu manam vendum
Iravum pagalum irandanaal Inbam thunbam irandanaal
Iravum pagalum irandanaal Inbam thunbam irandanaal
Uravum pirivum irandanaal Ahh
Uravum pirivum irandanaal Ullam ondru pothathae
Irandu manam vendum
Kangalin thandanai kaatchi vazhi Kaatchiyin thandanai kaadhal vazhi
Kangalin thandanai kaatchi vazhi Kaatchiyin thandanai kaadhal vazhi
Kaadhalin thandanai kadavul vazhi
Kaadhalin thandanai kadavul vazhi Kadavulai thandikka enna vazhi
Irandu manam vendum Iraivanidam ketpen
Ninaithu vaada ondru Marandhu vaazha ondru
Irandu manam vendum
Song Details |
|
---|---|
Movie Name | Vasantha Maligai |
Director | K.S. Prakash Rao |
Stars | Sivaji Ganesan, Vanisri, Nagesh |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***