Wednesday, May 13, 2020

Chithirai Maadham Song Lyrics in Tamil

Chithirai Maadham Song Lyrics in Tamil

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்ம் ம்ம் ம்ம்ம்

தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
சொர்க்கமோ நானும் நீயும் போகும் இடம்
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்

அந்நாளிலே நீ தந்த கனவு காயாகி இப்போது கனியானதோ
என் நெஞ்சிலே நீ தந்த உறவு கனவாகி இப்போது நனவானதோ
மின்னல் இளமேனி ஆசைத் தீர மெல்ல மெல்ல சேராதோ
பொன்னழகு கன்னம் காதல் தேவன் பூஜையில் மலராதோ
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்ம் ம்ம் ம்ம்ம்
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்

பூமாலைகள் உன் மீது விழுந்து ஊர் எங்கும் பேர் பாடும் பொன் நாளிலே
பாமாலைகள் பல்லாக்கு வரிசை ஒன்றல்ல பலகோடி உன் வாழ்விலே
பங்குக் கொள்ள வந்தேன் கண்ணா உந்தன் சங்கம் வர கூடாதோ
மங்கை இவள் பெயரும் உன்னுடன் சேர்ந்தால் வாழ்வே மலராதோ

தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
சொர்க்கமோ நானும் நீயும் போகும் இடம்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்ம் ம்ம் ம்ம்ம்

Lyrics in English

Chithirai maadham pournami neram Muthu radhangal oorvalam pogum
Chithirai maadham pournami neram Muthu radhangal oorvalam pogum Mm mm mmm

Thaeril vandha raaja raajan En pakkam
Thaenulaavum thaen nilaavum Un pakkam
Sorgamo naanum neeyum pogum idam
Thaeril vandha raaja raajan En pakkam

Annaalilae nee thandha kanavu Kaayaagi ippodhu kaniyaanadho
En nenjilae nee thandha uravu Kanavaagi ippodhu nanavaanadho
Minnal ila maeni aasai theera Mella mlla saeraadho
Ponnazhaghu kannam kaadhal dhevan Poojaiyil malaraadho
Chithirai maadham pournami neram Muthu radhangal oorvalam pogum
Chithirai maadham pournami neram Muthu radhangal oorvalam pogum Mm mm mmm
Thaeril vandha raaja raajan En pakkam

Poo maalaigal un meedhu vizhundhu Oorengum paer paadum ponnaalilae
Paamaalaigal pallaakku varisai Ondralla pala kodi un vaazhvilae
Pangu kolla vandhen Kannaa undhan Sangam vara koodaadho
Mangai ival paerum unnudan saerndhaal Vaazhvae malaraadho

Thaeril vandha raaja raajan En pakkam
Thaenulaavum thaen nilaavum Un pakkam
Sorgamo naanum neeyum pogum idam
Chithirai maadham pournami neram Muthu radhangal oorvalam pogum
Chithirai maadham pournami neram Muthu radhangal oorvalam pogum Mm mm mmm

Song Details

Movie Raman Ethanai Ramanadi
Stars Sivaji Ganesan, K. R. Vijaya, Padmini, Muthuraman, M. N. Nambiar, S. V. Ramadas, V. Nagaiah
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician M. S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***