Saturday, April 25, 2020

Vanamellam Shenbagapoo Song Lyrics in Tamil

Vanamellam Shenbagapoo Song Lyrics in Tamil

வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமி தானே காப்பு
நாமெல்லாம் தெய்வ படைப்பு
வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ

ஆத்தோரம் பூங்கரும்பு காத்திருக்கும் சிறு எறும்பு
அக்கறையில் ஆயிரம் பூ பூ  பூ
பூத்திருக்கு தாமரப்பூ பொன்னிறத்து காஞ்சறம்பூ
புத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்பு
எப்போதும் மாராப்பு எடுப்பான பூந்தோப்பு
என்ன என்ன எங்கும் தித்திப்பூ பூ
ஒட்டாத ஊதாப்பூ உதிராத வீராப்பு
வண்ண வண்ண இன்பம் ரெட்டிப்பூ பூ
வழி முழுதும் வனப்பு எனக்கழைப்பு
புது தொகுப்பு வகுப்பு கணக்கெடுப்பு
வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ

கெட்டவர்க்கு மனம் இரும்பு நல்லவரை நீ விரும்பு
எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு
ஏழைகளின் நல்லுழைப்பு என்ன இங்கு அவர் பிழைப்பு
வாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு
வீணாக இழுக்கும் வம்பு வினையாகும் கைகலப்பு
விட்டு விடு சின்ன தம்பி எயிப்பு
கையோடு எடு சிலம்பு கலந்தாட நிமிர்ந்தெழும்பு
கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு
விறுவிறுப்பு இருக்கு சுறுசுறுப்பு அருவருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு
வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ
நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம் சாமி தானே காப்பு
நாமெல்லாம் தெய்வ படைப்பு
வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ

Lyrics in English

Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo
Then podhigai kaatrinilae Sendhazhampoo
Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo
Then podhigai kaatrinilae Sendhazhampoo
Nallavanga vaazhkkaikkellaam Saami thaanae kaappu
Naamellaam dheiva padaippu
Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo
Then podhigai kaatrinilae Sendhazhampoo

Aathoram poongarumbu Kaaththirukkum siru erumbu
Akkaraiyil aayiram poo poo poo
Pooththirukku thaamara poo Ponniraththu kaanjarampoo
Putham pudhu poonjirupu toppu
Eppodhum maaraappu Eduppaana poondhoppu
Enna enna engum thiththipp poo poo
Ottaadha oodhappoo Udhiraadha veerappu
Vanna vanna inbam rettipp poo poo
Vazhi muzhudhum vanappu enakkazhaippu
Pudhu thogupu vagupu kanakkeduppu
Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo
Then podhigai kaatrinilae Sendhazhampoo

Kettavarkku manam irumbu Nallavarai nee virumbu
Ellorkkum varuvadhindha mooppu
Ezhaigalin nalluzhaippu Enna ingu avar pizhaippu
Vaazhvu varum endru ethir paarppu
Veenaaga ilukkum vambu Vinaiyaagum kaikalappu
Vittu vidu chinna thambi yeippu
Kaiyyodu edu silambu Kalandhaada nimirndhezhumbu
Kaiyil varum nalla nalla vaaippu
Viruviruppu irukku surusuruppu Aruvaruppu othukku varum sirappu
Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo
Then podhigai kaatrinilae Sendhazhampoo
Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo
Then podhigai kaatrinilae Sendhazhampoo
Nallavanga vaazhkkaikkellaam Saami thaanae kaappu
Naamellaam dheiva padaippu
Vanamellaam shenbagappoo Vaanellaam kungumappoo
Then podhigai kaatrinilae Sendhazhampoo

Song Details

Movie Nadodi Pattukaran
Stars M. Karthik, Mohini, MN Nambiyar, Jaishankar, Senthil
Singers S.P. Balasubramaniam
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1992

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***