Thursday, March 5, 2020

Oho Oho Manithargale Tamil Song Lyrics in Tamil

ஹோ ஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்
ஓஹோஹோ ஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள் ஓஹோஹோ ஹோ

அழுகி போனால் காய்கறி கூட சமையலுக்கு ஆகாது
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
உரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறி திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது
காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிர்களை காப்பதுமில்லை
ஓஹோஹோஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள் ஓஹோஹோ ஹோ

அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காத்துக்கு நிக்காது
அழகாய் இருக்கும் காஞ்சிரை பழங்கள் சந்தையில் விக்காது
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது
விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது
கண்ணை மூடும் பெருமைகளாலே தம்மை மறந்து வீரர்கள் போலே
ஓஹோஹோஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள் ஓஹோஹோ ஹோ

ஓதிய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரம் ஆகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது
பழிப்பதனாலே தெளிவுள்ள மனசு பாழ்பட்டு போகாது
பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது
காற்றை கையில் பிடித்தவன் இல்லை தூற்றி தூற்றி வாழ்ந்தவன் இல்லை
ஓஹோஹோஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள் ஓஹோஹோ ஹோ

Lyrics in English

Ahaaa ahhaa aaahaaa
Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal
Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal
Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal
Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal
Ohohohoooo

Azhugi ponaal kaigari kuda Samayalukku aagadhu
Arivilladhavan uyirum manamum Oorukku udhavaadhu
Uriththu paarthaal vengaayathil Ondrum irukaadhu
Ulari thiribavan vaarthaiyilae Oru urupadi thaeraathu
Kaalam ponaal thirumbuvathillai Kaasugal uyirgalai kaapadhumillai
Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal
Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal Ohohohoooo

Adipadai indri kattiya maaligai Kaathukku nikkadhu
Azhagaai irukkum kaanjirai pazhangal Sandhaiyil vikkadhu
Vilambarathaalae uyarndhavan vaazhkai Nirantharam aagathu
Vilakkirundhaalum ennai illamal Velicham kidaikkadhu
Kannai moodum perumaigalaalae Thammai marandhu veerargal polae
Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal
Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal Ohohohoooo

Odhiya marangal peruthirunthaalum Uththiram aagathu
Uruvaththil siriyathu kadugaanaalum Kaaram pogadhu
Pazhipadhanaalae thelivulla manasu Paazh pattu pogadhu
Paadhaiyai vittu vilagiya kaalgal Oor poyiseraadhu
Kaatrai kaiyil pidithavan illai Thootri thootri vaazhndhavan illai
Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal
Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal Ohohohoooo

Song Details

Movie Padithal Mattum Pothuma
Hero Sivajiganesan
Singers T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1962

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***