Sunday, December 15, 2019
Nalla Nalla Nilam Paarthu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
12/15/2019
Nalla Nalla Nilam Paarthu Song Lyrics in Tamil
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்
பள்ளி என்ற நிலங்களிலே கல்விதனை விதைக்கணும்
பிள்ளைகளை சீர்திருத்தி பெரியவர்கள் ஆக்கணும்
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்
கன்னியர்க்கும் காளையர்க்கும் கட்டுப்பாட்டை விதைத்து
கற்பு நிலை தவறாத காதல் பயிர் வளர்த்து

அன்னை தந்தை ஆனவர்க்கு தம் பொறுப்பை விதைத்து
பின் வரும் சந்ததியை பேணும் முறை வளர்த்து
இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்
இல்லாதார் வாழ்க்கையிலே இன்பப் பயிர் வளர்க்கணும்
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்
பார் முழுதும் மனிதக்குலப் பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே பகுத்தறிவை வளர்த்து

போர் முறையை கொண்டவர்க்கு நேர்முறையை விதைத்து
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்
நாணயத்தை வளர்க்கணும்
Lyrics in English
Nalla Nalla Nilam Parthu
Naamum Vidhai Vidhaikanum
Naatumakkal Manangalile
Naanayathai Valarkanum
Nalla Nalla Nilam Parthu Naamum Vidhai Vidhaikanum
Naatumakkal Manangalile Naanayathai Valarkanum
Palli Endra Nilangalile Kalvidhannai Vidhaikanum
Pillaigalai Seerthiruthi Periyavargal Aakanum
Nalla Nalla Nilam Parthu Naamum Vidhai Vidhaikanum
Naatumakkal Manangalile Naanayathai Valarkanum
Kanniyarkum Kaalaiyarkum Kattupaatai Vidhaithu
Karpu Nilai Thavaraadha Kadhal Payir Valarthu

Annai Thandhai Aanavarku Thamm Porupai Vidhaithu
Pinvarum Sandhadhiyai Paenumvarai Valarthu
Irupavargal Idhayathile Irakathai Vidhaikanum
Illaadhaar Vaazhkayile Inba Payir Valarkanum
Nalla Nalla Nilam Parthu Naamum Vidhai Vidhaikanum
Naatumakkal Manangalile Naanayathai Valarkanum
Paar Muzhudhum Manidharkula Panbudhanai Vidhaithu
Paamarargal Nenjathile Pagutharivai Valarthu

Pormuraiyai Kondavarku Naermuraiyai Vidhaithu
Seer Valara Dhinamum Vegamadhai Valarthu
Petra Thirunaatinile Patrudhanai Vidhaikanum
Patrudhanai Vidhaithuvitu Nalla Otrumaiyai Valarkanum
Nalla Nalla Nilam Parthu Naamum Vidhai Vidhaikanum
Naatumakkal Manangalile Naanayathai Valarkanum
Naanayathai Valarkanum
Song Details |
|
---|---|
Movie | Vivasayee |
Singers | T.M.Soundarajan |
Lyrics | Udumalai Narayanakavi |
Musician | K.V. Mahadevan |
Year | 1967 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***