Friday, December 20, 2019

Ayyaya Mella Thattu Song lyrics in Tamil

Ayyaya Mella Thattu Song lyrics in Tamil

PS: அய்யய்யா மெல்லத்தட்டு
அய்யய்யா மெல்லத்தட்டு
கன்னம் வலி எடுக்கும்
நெஞ்சம் துடிதுடிக்கும்
ஆசை பெருகி விடும்
அங்கம் சிவந்து விடும்
அய்யய்யா மெல்லத்தட்டு
TMS: வண்ண கண்டாங்கி கொண்டாடும் கண்ணாட்டி உன்னோடு
சந்தோஷம் சல்லாபம் உல்லாசம் காணாமல்
தீராது என் ஆசை தீராது சிங்காரியே
சிங்காரி சின்னச்சிட்டு
சிங்காரி சின்னச்சிட்டு
செல்லக் கிளியல்லவோ
செவ்வந்திப் பூவல்லவோ
மஞ்சள் நிறமல்லவோ
வைர நகை அல்லவோ
PS: அய்யய்யா மெல்லத்தட்டு

PS: நடக்கும் பாதை ஒன்றானது
மயக்கும் போதை உண்டானது
சிரிக்கும் மேனி செண்டானது
ஆஹா மெல்லத்தட்டு ஆஹா மெல்லத்தட்டு
ஆஹா மெல்லத்தட்டு மெல்லத்தட்டு மெல்லத்தட்டு
TMS: எனக்கும் ஏதோ உண்டானது
இதற்கும் மேலே என்னாவது
இதற்கும் மேலே என்னாவது
அடி சித்தாடை பாவாடை மேலாடும் முந்தானை
கொத்தோடு கொத்தாக கொள்ளாமல் அள்ளாமல்
விட்டாலும் தீராது சுட்டாலும் மாறாதடி
PS: அய்யய்யா மெல்லத்தட்டு
TMS: சிங்காரி சின்னச்சிட்டு

PS: அல்லிப்பூ நீரோடை அருகிருக்க
முல்லைப்பூ தேர் போலே முகம் இருக்க
சொல்லத்தான் கூடாத சுகம் கொடுக்க
TMS: அடி கட்டாணி முத்தே நீ கண்ணோடு கண்ணாக
செந்தாழம்பூவாக செவ்வாழைத் தண்டாக
செந்தூர பொட்டோடு வந்தாலும் வந்தாயடி
சிங்காரி சின்னச்சிட்டு
செல்லக் கிளியல்லவோ செவ்வந்திப் பூவல்லவோ
மஞ்சள் நிறமல்லவோ வைர நகை அல்லவோ
PS: அய்யய்யா மெல்லத்தட்டு
கன்னம் வலி எடுக்கும்
நெஞ்சம் துடிதுடிக்கும்
ஆசை பெருகி விடும்
அங்கம் சிவந்து விடும்
அய்யய்யா மெல்லத்தட்டு

Lyrics in English

PS: Aiyaiyaa mella thattu
Aiyaiyaa mella thattu
Kannam vali edukkum
Nenjam thudi thudikkum
Aasai perugi vidum
Angam sivandhu vidum
Aiyaiyaa mella thattu
TMS: Vanna kandaangi kondadum Kannaatti unnodu
Sandhosha sallaabam Ullaasam kaanaamal
Theeraadhu ennaasai Theeradhu singaari
Singaari chinna chittu
Singaari chinna chittu
Chella kili allavo
Sevvandhi poovallavo
Manjal niramallavo
Vaira nagai allavo
PS: Aiyaiyaa mella thattu

PS: Nadakkum paadhai ondraanadhu
Mayakkum bodhai undaanadhu
Sirikkum maeni chendaanadhu
Aahaa mella thattu aahaa mella thattu
Aahaa mella thattu mella thattu Mella thattu
TMS: Enakkum yedho undaanadhu
Idharkum melae ennaavadhu
Idharkum melae ennaavadhu
Adi sithaadai paavaadai Melaadum mundhaanai
Kothodu kothaaga Kollaamal allaamal
Vittaalum theeradhu Suttaalum maaradhadi
PS: Aiyaiyaa mella thattu
TMS: Singaari chinna chittu

PS: Allippoo neerodai arugirukka
Mullaippoo thaer polae mugamirukka
Solla thaan koodaadha sugam kodukka
TMS: Adi kattaani muthae nee Kannodu kannaaga
Senthaazham poovaaga Sevvaazhai thandaaga
Sendhoora pottodu Vandhaalum vandhaaiyadi
Singaari chinna chittu
Chella kili allavo Sevvandhi poovallavo
Manjal niramallavo Vaira nagai allavo
PS: Aiyaiyaa mella thattu
Kannam vali edukkum
Nenjam thudi thudikkum
Aasai perugi vidum
Angam sivandhu vidum
Aiyaiyaa mella thattu

Song Details

Movie En Thambi
Singers T.M.Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1968

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***