Friday, January 4, 2019
Enunga Mappillai Enna Nenappu Tamil Song Lyrics
By
தமிழன்
@
1/04/2019
Enunga Mappillai Enna Nenappu Enippadigal Movie Song Lyrics
Movie: Enippadigal, Year: 1979, Music: K V Mahadevan,
Singers: P Susheela, SP Balasubramaniam, Lyricist: Kannadasan
Lyrics in Language Tamil
பெ: ஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு
ஆ: ம்... ஹஹாஹா
பெ: இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு
ஆ: ஆஹா..
பெ: ஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு
சிறு பொண்ணு அல்லி மொட்டு
சிங்காரச் சின்னச் சிட்டு
அம்மாடிக் கண்ணத் தொட்டு
மனந் தொட்டு குணந் தொட்டு
இடந் தொட்டு வலந் தொட்டு
பெ: ஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு
ஆ: ஏனடிச் சின்னம்மா என்ன நெனப்பு
பெ: ம்..ஹஹாஹஹா
ஆ: இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு
பெ: ம் ஹும்..
ஆ: ஏனடிச் சின்னம்மா என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு
வயசுல முல்லை மொட்டு
வாலிபம் காளைக் கட்டு
அம்மாடிக் கண்ணத் தொட்டு
மனந்தொட்டு குணந்தொட்டு இடந்தொட்டு வலந்தொட்டு
ஆ: ஏனடிச் சின்னம்மா என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு
பெ: தாமரைக் காலிரண்டும் தண்டையைப் போட்டுக்கிட்டா
சாமத்தில் ஓசை வரும் சங்கீதமா
அந்தத் தாளத்தை நீ ரசிப்பே சந்தோஷமா
தாமரைக் காலிரண்டும் தண்டையைப் போட்டுக்கிட்டா
சாமத்தில் ஓசை வரும் சங்கீதமா
அந்தத் தாளத்தை நீ ரசிப்பே சந்தோஷமா
ஆ: தாளத்துக்கேத்தபடி ஆடத்தான் நான் பொறந்தேன்
தாளத்துக்கேத்தபடி ஆடத்தான் நான் பொறந்தேன்
ஜதி சொல்ல நீ பொறந்தே சந்தேகமா
நானும் சுதி கொஞ்சம் சேத்துக்கிட்டேன் சந்தோஷமா
பெ: புல்லாலே மஞ்சம் போட்டு
ஆ: ஹஹா
பெ: பூ மெத்தை மேலே போட்டு
ஆ: ஹஹா
பெ: நல்லாத்தான் கடவுள் வச்சான்
நடக்கட்டும் நடக்கட்டும் நமக்குள்ளே இருக்கட்டும்
ஆ: ஏனடிச் சின்னம்மா என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு
பெ: கோழிக்குச் சேவல் சொந்தம்
குயிலுக்கு ஜோடி சொந்தம்
ஆணுக்குப் பொண்ணு சொந்தம் பல காலமா
நாமும் அவசரச் சொந்தம் கொண்டோம் சில காலமா
கோழிக்குச் சேவல் சொந்தம்
குயிலுக்கு ஜோடி சொந்தம்
ஆணுக்குப் பொண்ணு சொந்தம் பல காலமா
நாமும் அவசரச் சொந்தம் கொண்டோம் சில காலமா
ஆ: பல்லாக்கு ஒடம்பக் கண்டு பளபளக் கன்னங் கண்டு
பல்லாக்கு ஒடம்பக் கண்டு பளபளக் கன்னங் கண்டு
சும்மாவா நானிருப்பேன் சரிதானம்மா
என்னை சொர்க்கத்தில் கொண்டு செல்ல வருவாயம்மா
பெ: நான் ரொம்ப புதுசு மச்சான்
ஆ: ம்ஹ்ம் ..
பெ: வயசுல சிறிசு மச்சான்
ஆ: ஆஹ்ஹான் ...
பெ: நீ கொஞ்சம் சொல்லித் தந்தா
நடக்கிறேன் சிரிக்கிறேன் அணைக்கிறேன் ரசிக்கிறேன்
ஆ: ஏனடிச் சின்னம்மா என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு
பெ: ஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***