Wednesday, May 6, 2020

Machana Pathingala Song Lyrics in Tamil

Machana Pathingala Song Lyrics in Tamil

ஏன் மச்சான மச்சான
மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு
வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே

வெள்ளிச்சரம் புன்னகையில் அள்ளி வச்சேன் காணலியே
நான் அள்ளி வச்சேன் காணலியே
ஊர்கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்
மயிலாடும் காட்டில் தனியாக அவரை பார்த்தாதான் சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே

பச்சை புள்ளை போல் அவர் பார்த்து நிக்க
இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க
பச்சை புள்ளை போல் அவர் பார்த்து நிக்க
இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க
அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள
நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள

கஸ்தூரி கலை மான்களே அவர கண்டாக்கா சொல்லுங்களேன்
ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர பார்த்தாக்கா சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே

கல்யாணம் பேசி கண்டாங்கிச் சேலை
தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன்

கல்யாணம் பேசி கண்டாங்கிச் சேலை
தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன்
புது மஞ்சள் பூசி பொன் மேடை இட்டு
மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக
மாப்பிள்ளை ஆக மாப்பிள்ளை ஆக

தலை வாழை இலை போடுங்க ஊர விருந்துக்கு வர சொல்லுங்க
தலை வாழை இலை போடுங்க ஊர விருந்துக்கு வர சொல்லுங்க
பூ போட்ட மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம் மனசார வாழ்த்துங்களேன்
எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்

Lyrics in English

Yen Machaana Machaana
Machaana partheengala Malai vazhai thoppukkullae
Machaana partheengala Malai vazhai thoppukkullae
Kuyilakka konjam Nee paarthu sollu
Vanthaara kaanaliyae Avar vanthaara kaanaliyae

Velli charam punnagayil alli vachen kaanaliyae
Naan alli vachen kaanaliyae
Oorgola megangalae Neenga oru nazhi nillungalen
Mayilaadum kattil Thaniyaaga avarai Parthathaan sollungalen
En yekkaththai sollungalen
Machaana partheengala Malai vazhai thoppukkullae

Pacha pullai pol Avarpaathu nikka
Icha kodiyattam Naan paathu sokka
Pacha pullai pol Avarpaathu nikka
Icha kodiyattam Naan paathu sokka
Achcharam kandu Muththaaram soota
Koththodu enna Nenjodu alla
Nenjodu alla Nenjodu alla

Kashturi kalai maangalae Avara kandakka solungalen
Rojakal aadum Thottathil avara Paathakka solungalen
En yekkaththai solungalen
Machaana partheengala Malai vazhai thoppukkullae

Kalyanam pesi Kandaangi chela
Thandhakka enna Mattenna solven

Kalyanam pesi Kandaangi chela
Thandhakka enna Mattenna solven
Pudhu manjal poosi Pon medai ittu
Mannadhi mannan mapillai aaga
Maapillai aaga Maapillai aaga

Thala vaazha ela podunga Oora virundhukku vara solunga
Thala vaazha ela podunga Oora virundhukku vara solunga
Poo potta manjam Aadatum konjam Manasaara vaazhthungalen
Enga kulam vaazha vaazthungalen

Song Details

Movie Annakili
Stars Sivakumar, Sujatha, Jeyalackshmi, Srikanth
Singers S. Janaki
Lyrics Panchu Arunachalam
Musician Illayaraja
Year 1976

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***