Wednesday, June 2, 2021

Kaalam Pala Kaathirundhom Song lyrics in Tamil

 Kaalam Pala Kaathirundhom Song lyrics in Tamil

காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே
கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே
காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே
கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே
காவலுக்கு வந்து நின்றாய் கண்ணப் பெருமானே
கை நிறைய செல்வம் தந்தாய் கண்ணப் பெருமானே
காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே
கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே

ஓராயிரம் கோடி உயர்ந்தாலும் உன்னை
ஒருநாளும் மறவாமல் பணி செய்வோம் கண்ணா

தோன்றாமல் தோன்றி பரிசாக வந்தாய்
சுகமான வாழ்வொன்று அருள் செய்தாய் மன்னா
ஆகாயம் எட்டும் வண்ணம் புகழ் வந்த போதும்
அகங்காரம் என்றுமில்லை பணிவுண்டு கண்ணா
காவலுக்கு வந்து நின்றாய் கண்ணப் பெருமானே
கை நிறைய செல்வம் தந்தாய் கண்ணப் பெருமானே

பருவத்தில் தெய்வங்கள் தரும் எண்ணும்போது
பரந்தாமன் அருளின்றி நல்வாழ்வு ஏது

ஊர் வந்து உறவென்று உறவாடும் நேரம்
ஓர் சொல்லில் அடங்காது நீ தந்த வாழ்வு
மாணிக்கப் பந்தலிட்டு மனைக் கட்டினாலும்
காணிக்கை உனக்குண்டு கண்ணான கண்ணா
காவலுக்கு வந்து நின்றாய் கண்ணப் பெருமானே
கை நிறைய செல்வம் தந்தாய் கண்ணப் பெருமானே

தாயென்றும் சேயென்றும் சந்தோஷப் பாட்டு
தந்தைக்கு நீ தந்த நல்வாக்குச் சீட்டு
பட்டாடை நகையென்று பிள்ளைக்கும் போட்டு
பார்க்கின்ற சுகந்தன்னை நிலையாக்கிக் காட்டு
மாங்கல்யம் தந்த தெய்வம் பல்லாண்டு வாழ
மங்காத அருள் வேண்டும் நவநீதக் கண்ணா
காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே
கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே
காவலுக்கு வந்து நின்றாய் கண்ணப் பெருமானே
கை நிறைய செல்வம் தந்தாய் கண்ணப் பெருமானே

Lyrics in English

Kaalam Pala Kaathirundhom Kanna Perumaane
Karpanaiyil Vazhnthiruthom Kanna Perumaane
Kaalam Pala Kaathirundhom Kanna Perumaane
Karpanaiyil Vazhnthiruthom Kanna Perumaane
Kaavaluku Vanthu Nintrai Kanna Perumaane
Kai Niraiya Selvam Thanthai Kanna Perumaane
Kaalam Pala Kaathirundhom Kanna Perumaane
Karpanaiyil Vazhnthiruthom Kanna Perumaane

Orayiram Kodi Uyarnthalum Unnai
Oru Naalum Maravamal Pani Seivom Kanna

Thondramal Thondri Parisaaga Vanthai
Sugamaana Vazhvondru Arul Seithaai Manna
Aagayam Ettum Vannam Puzhal Vantha Pothum
Agangaaram Endrumillai Panivundu Kanna
Kaavaluku Vanthu Nintrai Kanna Perumaane
Kai Niraiya Selvam Thanthai Kanna Perumaane

Paruvathil Deivangal Tharum Ennumpothu
Paranthaman Arulindri Nalvazhvu Yethu

Oor Vanthu Uravendru Uravaadum Neram
Oor Sollil Adankathu Nee Thantha Vazhvu
Maanika Panthalittu Manai Kattinaalum
Kaanikai Unakundu Kannaana Kanna
Kaavaluku Vanthu Nintrai Kanna Perumaane
Kai Niraiya Selvam Thanthai Kanna Perumaane

Thaayendum Seiyendum Santhosa Paatu
Thanthaiku Nee Thantha Nalvaaku Cheetu
Pattadai Nagaiyendru Pillaikum Pottu
Paarkindra Suganthannai Nilaiyaaki Kaatu
Maangalyam Thantha Deivam Pallandu Vazha
Mangatha Arul Vendum Navaneetha Kanna
Kaalam Pala Kaathirundhom Kanna Perumaane
Karpanaiyil Vazhnthiruthom Kanna Perumaane
Kaavaluku Vanthu Nintrai Kanna Perumaane
Kai Niraiya Selvam Thanthai Kanna Perumaane

Song Details

Movie Name Aan Pillai Singam
Director S.P. Muthuraman
Stars Sivakumar, R. Muthuraman, Sujatha, Sripriya, Vijayakumar, Cho
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician Vijaya Bhaskar
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***