Sunday, May 10, 2020

Maalaiyittom Pongalittom Song Lyrics in Tamil

Maalaiyittom Pongalittom Song Lyrics in Tamil

SG: மாலையிட்டோம் பொங்கலிட்டோம் மனசாரப் பூஜையிட்டோம்
மாலையிட்டோம் பொங்கலிட்டோம் மனசாரப் பூஜையிட்டோம்
காவல் தர வேண்டுமடி கங்கையம்மா
எங்கள் காலம் வெல்ல வேண்டுமடி கங்கையம்மா
SG, LRE: மாலையிட்டோம் பொங்கலிட்டோம் மனசாரப் பூஜையிட்டோம்
காவல் தர வேண்டுமடி கங்கையம்மா
எங்கள் காலம் வெல்ல வேண்டுமடி கங்கையம்மா

SG: தேவி உன்னைப் பார்க்க தேடி வரும்போது திரையைப் போட்டு மறைக்குறாரு பூசாரி
நீ கொடுத்த பூமி விளைஞ்சு வரும்போது ஏகபோகம் பண்ணுறாரு ஆசாமி
நீ கொடுத்த பூமி விளைஞ்சு வரும்போது ஏகபோகம் பண்ணுறாரு ஆசாமி
LRE: அவன் நெலத்துகாரனாம்
ரொம்ப பலத்துக்காரனாம்
அவன் நெலத்துகாரனாம் ரொம்ப பலத்துக்காரனாம்
நீ  நினைச்சியின்னா அவனுமிப்போ பொழைச்சிருப்பானா
நீ  நினைச்சியின்னா அவனுமிப்போ பொழைச்சிருப்பானா
SG: மாலையிட்டோம் பொங்கலிட்டோம் மனசாரப் பூஜையிட்டோம்

SG: வேட்டை நாய்களொரு காட்டு முயலையே விரட்டுது கங்கையம்மா
அம்மா விரட்டுது கங்கையம்மா
LRE: அந்தக் காட்டு முயலிப்போ வேட்டை நாய்களைத் துரத்துது கங்கையம்மா
அம்மா துரத்துது கங்கையம்மா
SG: இந்த சக்தி வந்ததெதனாலே உந்தன் பக்தியுள்ளதனாலே
இந்த சக்தி வந்ததெதனாலே உந்தன் பக்தியுள்ளதனாலே
மாலையிட்டோம் பொங்கலிட்டோம் மனசாரப் பூஜையிட்டோம்

SG: காட்டைக் கூடக் கொளுத்துமடி உன் கற்பூரத்தட்டு
தட்டு கயவர் கூட்டம் ஒழியுமடி உன் கண் ஜாடை பட்டு
LRE: பட்டு வீட்டுப் பெண்ணைக் காக்கும்படி நீ சூடிய மலர்மொட்டு
SG, LRE: வெல்லும் காலம் வெல்லும் என்போம் ஆணை உன் மேலிட்டு
SG: ஆணை உன் மேலிட்டு

SG: தாய் பார்த்த பார்வையைத்தான் பார்த்த உள்ளமே தன்னை மறந்ததம்மா
தர்மத்தின் தெய்வமே சக்தி உன் கண்ணிலே மர்மம் புரிந்ததம்மா
சிவந்த உன் கண்களாலே சீறுவாய் எனது தாயே
நடந்ததும் உண்மை தாயே நடப்பதும் நன்மை தாயே

Song Details

Movie Kalam Vellum
Stars Jaishankar, C. R. Vijayakumari, Nagesh, Vijaya Lalitha, O. A. K. Devar, M. R. R. Vasu
Singers Seerkazhi Govindarajan, L. R. Eswari
Lyrics Kannadasan
Musician Sankar Ganesh
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***