Thursday, January 31, 2019
Javvadhu Medaiyitu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/31/2019
Javvadhu Medaiyitu Song Lyrics in Tamil
ஆண்: ஜவ்வாது மேடையிட்டு பெண்: ஓஹோ
ஆண்: சர்க்கரையில் பந்தலிட்டு பெண்: ஓஹோ
ஆண்: ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
பெண்: நாகலிங்கப் பூவெடுத்து நாலு பக்கம் கோட்டை கட்டி வா வா வா ஆண்: ஆஹா
பெண்: மாம்பழத்துச் சாறெடுத்து மல்லிகையில் தேனெடுத்து வா வா வா
பெண்: நாகலிங்கப் பூவெடுத்து நாலு பக்கம் கோட்டை கட்டி வா வா வா
மாம்பழத்துச் சாறெடுத்து மல்லிகையில் தேனெடுத்து வா வா வா
இருவரும்: ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
ஆண்: வேலோடு விழியிரண்டு வெள்ளோட்டம் போனதென்று
நூலான இடையெடுத்து போராட வந்த பெண்ணே
வேலோடு விழியிரண்டு வெள்ளோட்டம் போனதென்று
நூலான இடையெடுத்து போராட வந்த பெண்ணே
பெண்: ஆளான நாள் முதலாய் அச்சாரம் கொடுத்து விட்டு
வாழாமல் வாடவிட்டு பாராமல் சென்ற கண்ணா
ஆளான நாள் முதலாய் அச்சாரம் கொடுத்து விட்டு
வாழாமல் வாடவிட்டு பாராமல் சென்ற கண்ணா கண்ணா
இருவரும்: ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
ஆண்: பூப்போல இதழ் விரித்து பொன்னான உடலெடுத்து
தேர் போல வந்த கண்ணே சிலை போல வந்த பெண்ணே
பெண்: அத்தானின் துணையிருக்க முத்தான மொழியிருக்க
பித்தாகக் கிடந்த என்னைக் கொத்தாக அணைத்த கண்ணா
கண்ணா
இருவரும்: ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
Lyrics in English
Male: Javvadhu Medaiyitu Female: Oho
Male: Sarkaraiyil panthalittu Female: oho
Male: Javvadhu Medaiyitu sarkariyil panthalittu
sevvalai kaaleduthu va va va
semmadhulai pilandhu tha tha tha
Female: Nagalinga Pooveduthu naalu pakkam kottai katti va va va Male: Aha
Female: Mampalathu chareduthu malligaiyil theaneduthu va va va
Female: Nagalinga Pooveduthu naalu pakkam kottai katti va va va
Mampalathu chareduthu malligaiyil theaneduthu va va va
Both: avvadhu Medaiyitu sarkariyil panthalittu
sevvalai kaaleduthu va va va
semmadhulai pilandhu tha tha tha
Male: Velodu vizhi irandu vellodam ponathentru
Noolana idaiyaduthu porata vantha penne
Velodu vizhi irandu vellodam ponathentru
Noolana idaiyaduthu porata vantha penne
Female: Aalana naal mudhalai acharam koduthu vittu
valamal vaadavittu paaramal sentra kanna
Aalana naal mudhalai acharam koduthu vittu
valamal vaadavittu paaramal sentra kanna
Both: avvadhu Medaiyitu sarkariyil panthalittu
sevvalai kaaleduthu va va va
semmadhulai pilandhu tha tha tha
Male: Poopola idhal virithu ponnana udaleduthu
thear pola vantha kanne silai pola vantha pennea
Female: Athanin thunairuka muthana mozhiruka
bithaga kidantha ennai kothaga anaitha kanna kanna
Both: avvadhu Medaiyitu sarkariyil panthalittu
sevvalai kaaleduthu va va va
semmadhulai pilandhu tha tha tha
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Panathottam | 1963 | T.M.Soundarajan, P.Suseela | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
Forever green song.
ReplyDelete