Sunday, January 24, 2021

Ezhudhi Ezhudhi Song lyrics in Tamil

 Ezhudhi Ezhudhi Song lyrics in Tamil

எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்

திருச்செந்தூர் வடிவேலும் திருத்தணிகை மாமயிலும்

சங்கத் தமிழில் கந்தன் புகழைப் பாடச் சொல்லிக் கேட்டு வரும்
கந்தன் புகழைக் கேட்டுக் கேட்டு வேலும் மயிலும் ஆடி வரும்
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்

பழமுதிர்சோலைப் பன்னீரும் சுவாமிமலை திருநீறும்

வள்ளிக் கணவன் முருகன் பெயரைப் பாடச் சொல்லி அருள் கூறும்
வண்ணக் கவிதை பாடப் பாட வாழ்வும் வளமும் தேடிவரும்
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்

பழனிமலைப் பஞ்சாம்ருதமும் பரங்குன்றம் சந்தனமும்

உள்ளம் தன்னில் இன்பம் தந்து குமரன் அருளைப் பாடி வரும்
பிள்ளைத் தமிழை அள்ளித் தந்து பேரும் புகழும் சேர்த்து விடும்
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்
பாடு பாடு என்று சொன்னான்

Lyrics in English

Ezhudhi Ezhudhi Pazhagi Vanthen Ezhuthu Kooti Paadi Vanthan
Paadukulle Murugan Vanthan Paadu Paadu Endru Sonnan

Thiruchenthor Vadivelum Thiruthanigai Maamayilum

Sanga Thamil Kanthan Puzhalai Paada Solli Keatuvarum
Kanthan Puzhalai Kettu Kettu Velum Mayilum Aadivarum
Ezhudhi Ezhudhi Pazhagi Vanthen Ezhuthu Kooti Paadi Vanthan
Paadukulle Murugan Vanthan Paadu Paadu Endru Sonnan

Pazhamuthircholai Panneerum Samymalai Thiruneerum

Valli Kanavan Murugan Peyarai Paada Solli Arul Koorum
Vanna Kavithai Paada Paada Vazhvum Valamum Theadivarun
Ezhudhi Ezhudhi Pazhagi Vanthen Ezhuthu Kooti Paadi Vanthan
Paadukulle Murugan Vanthan Paadu Paadu Endru Sonnan

Pazhalimalai Panjamirathamum Parankundram Santhanamum

Ullamthannil Inbam Thanthu Kumaran Arulai Paadivarum
Pillai Thamilai Alli Thathu Perum Pugalum Serthuvidum
Ezhudhi Ezhudhi Pazhagi Vanthen Ezhuthu Kooti Paadi Vanthan
Paadukulle Murugan Vanthan Paadu Paadu Endru Sonnan
Ezhudhi Ezhudhi Pazhagi Vanthen Ezhuthu Kooti Paadi Vanthan
Paadukulle Murugan Vanthan Paadu Paadu Endru Sonnan
Paadu Paadu Endru Sonnan

Song Details

Movie Name Gumasthavin Magal
Director A.P. Nagarajan
Stars Sivakumar, Kamal Haasan, Aarathi, Usha Shakeela, Nagesh, Pandari Bai
Singers Soolamangalam Rajalakshmi, M.R. Vijaya
Lyricist Poovai Senguttavan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1974

1 comment :

  1. It such melodious in praise of god Murugu. It touches my heart

    ReplyDelete

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***