Monday, May 17, 2021
Oru Thai Vayitril Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/17/2021
Oru Thai Vayitril Song lyrics in Tamil
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்

நல்ல மனிதனுக்கும் நன்றி மறந்தவருக்கும் முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்

சோலை மலர்க்கூட்டம் சொந்தம் கொண்டாடி சிரித்து உறவாடுமே
மாலை பனிமூட்டம் மலர்கள் இடைத்தோன்றி பிரித்து விளையாடுமே
இங்கு நான் அங்கு நீ இன்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி என்று நீயே கூறலாம்
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
உடலின் பின்னோடு உலவும் நிழல் கூட இருட்டில் பிரிகின்றது
வெளிச்சம் வரும்போது உடலை நிழல் தேடி இணைய வருகின்றது
என் மனம் பொன் மனம் என்பதை காணலாம்
நாளை அந்த வேலை வந்து என்னை சேரலாம்
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
கண்ணை மறைக்கின்ற காலம் வரும்போது தருமம் வெளியேறலாம்
தருமம் அரசாளும் தருணம் வரும்போது தவறு வெளியேறலாம்

நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம்
அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம்
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
நல்ல மனிதனுக்கும் நன்றி மறந்தவருக்கும் முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
Lyrics in English
Oru thaai vayitril Vantha udanpirapil Konjam pirivu vanthaal
Pinbu uravu varum

Nalla manidhanukum Nandri marandhavarukum Munbu uravirunthaal
Pinbu pirivu varum
Oru thaai vayitril Vantha udanpirapil Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Solai malarkootam Sondham kondaadi Sirithu uravaadumae
Maalai panimootam Malargal idaithondri Pirithu vilaiyaadumae
Ingu naan angu nee Indru naam vaazhalaam
Annan potrum thambi Endru neeyae kooralaam
Oru thaai vayitril Vantha udanpirapil Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Udalin pinnodu Ulavum nizhalkooda Iruttil pirigindrathu
Velicham varumbodhu Udalai nizhal thedi Inaiya varugindrathu
En manam pon manam Enbadhai kaanalaam
Naalai andha velai Vanthu ennai seralaam
Oru thaai vayitril Vantha udanpirapil Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Kannai maraikindra Kaalam varumbodhu Dharumam veliyeralaam
Dharumam arasaalum Tharunam varumbodhu Thavaru veliyeralaam

Nallavar latchiyam Velvathu nichayam
Annaa andru sonnaar Endrum adhuthaan sathiyam
Annaa andru sonnaar Endrum adhuthaan sathiyam
Oru thaai vayitril Vantha udanpirapil Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Nalla manidhanukum Nandri marandhavarukum Munbu uravirundhaal
Pinbu pirivu varum
Oru thaai vayitril Vantha udanpirapil Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Song Details |
|
---|---|
Movie Name | Urimaikural |
Director | C.V. Sridhar |
Stars | M.G. Ramachandran, Latha, Anjali Devi, Nagesh, Thengai Srinivasan, Pushpalatha, Sachu |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***