Saturday, June 26, 2021

Osai Varamal Song lyrics in Tamil

 Osai Varamal Song lyrics in Tamil

TMS: ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே
ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே
PS: மீசை படாமல் மணி முத்தம் இடுங்கள் ஆஹா ஓஹோ ஆஆ
மீசை படாமல் மணி முத்தம் இடுங்கள்
மேனி கெடாமல் அதைக் கற்றுக் கொடுங்கள்
TMS: ஸ்ஸ் ம்ம்
ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே
ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே

TMS: மரகத சிலையை மடியினில் ஏந்தி பனி மலர் உடலில் படகென நீந்தி
மரகத சிலையை மடியினில் ஏந்தி பனி மலர் உடலில் படகென நீந்தி
PS: மன்மத ராஜ்ஜியம் போய் வருவோமே மந்திர பூசையில் மயங்கிடுவோமே

TMS: அந்தரங்க நாடகத்தின் தந்திரங்கள் அனைத்தையும்
அந்தம் முதல் ஆதி வரை என்று விளங்க
PS: சிந்துக் கவி பாடி இளம் பந்து விளையாட வரும்
சுந்தரனின் கைப்பிடியில் வஞ்சி மயங்க

TMS: சூல் கொண்ட மேகம் நீர்க் கொண்டு வார்க்க
நீர் கொண்ட பூமி நெஞ்சார வாழ்த்த
PS: சேல் கொண்ட கண்கள் செவ்வண்ணம் காட்ட
பொன்மேனி வீணை உன் கைகள் மீட்ட
TMS: ஸ்ஸ் ம்ம்
ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே
PS: ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே

PS: நவரச கோலம் முழுவதும் காட்டும் நளின சிங்காரம் மலர்களின் தோட்டம்
TMS: திருவடி தொடங்கி தலை வரை தழுவ கொடியிடை மீது தொடர்கதை எழுத
PS: ம் ஸ்
TMS: ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே
PS: ஆசை விடாமல் அன்பை செலவு செய்வோமே
TMS: ஓசை வராமல்
PS: நாம்
TMS: உறவு
PS: கொள்வோமே
ஓசை வராமல்
TMS: நாம்
PS: உறவு
TMS: கொள்வோமே

Lyrics in English

TMS: Osai varaamal Naam uravu kolvomae
Aasai vidaamal Anbai selavu seivomae
PS: Meesai padaamal Mani mutham idungal Ahaa oho aaaa
Meesai padaamal Mani mutham idungal
Maeni kedaamal adhai kattru kodungal
TMS: Shh mm
Osai varaamal Naam uravu kolvomae
Aasai vidaamal Anbai selavu seivomae

TMS: Maragadha silaiyai Madiyinil yaendhi Pani malar udalil padagena neendhi
Maragadha silaiyai Madiyinil yaendhi Pani malar udalil padagena neendhi
PS: Manmadha raajjiyam poi varuvomae Mandhira poojaiyil mayangiduvomae

TMS: Andharanga naadagatthin Thandhirangal athanaiyum
Andham mudhal aadhi varai Endru vilanga
PS: Sindhu kavi paadi ilam Pandhu vilaiyaada varum
Sundharanin kai pidiyil Vanji mayanga

TMS: Sool konda maegam Neer kondu vaarkka
Neer konda boomi Nenjaara vaazhtha
PS: Sael konda kangal Sevvannam kaakka
Pon maeni veenai Un kaigal meetta
TMS: Shh mm
Osai varaamal Naam uravu kolvomae
PS: Aasai vidaamal Anbai selavu seivomae

PS: Navarasa kolam Muzhuvadhum kaattum Nalina singaaram Malargalin thottam
TMS: Thiruvadi thodangi Thalai varai thazhuva Thudi idai meedhu Thodar kadhai ezhudha
PS: Mm shh
TMS: Osai varaamal Naam uravu kolvomae
PS: Aasai vidaamal Anbai selavu seivomae
TMS: Osai varaamal
PS: Naam
TMS: Uravu
PS: Kolvomae
Osai varaamal
TMS: Naam
PS: Uravu
TMS: Kolvomae

Song Details

Movie Name Anbe Aaruyire
Director A.C. Tirulokchandar
Stars Sivaji Ganesan, Manjula, Nagesh, K.A. Thangavelu, Manorama, Suruli Rajan
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***