Wednesday, June 23, 2021
Moham Athu Muppathu Naal Song lyrics in Tamil
By
தமிழன்
@
6/23/2021
Moham Athu Muppathu Naal Song lyrics in Tamil
MKM: மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள்
MKM: மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள்
இதயம் கலந்த காதல் என்றால் புதிதாய்த் தோன்றும் ஒவ்வொரு நாள்
மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள்
PS: பருவக் கால மழையைப் போலும் இளமை காணும் உறவு
அந்த மழைக்குப் பின்னால் தூவானம் போல் முதுமைக் கால நினைவு
MKM: குமரியாக இருக்கும்போது கூடல் என்பது இனிக்கும்
அந்த இனிப்பு என்றும் கசப்பதில்லை பாட்டியாகும் வரைக்கும்
PS: மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள்
MKM: ஊறும் தேனை மூடி வைத்தது உதடு என்னும் கதவு
அதில் உனக்குப் பாதி எனக்குப் பாதி எடுத்துக் கொள்ள உதவு
PS: ஆசைக் கடலில் ஆட வந்தது அழகு என்னும் படகு
அதில் மிதக்கும்போது மயக்கம் வந்ததைப் புரிந்துக் கொண்டது பிறகு
MKM: மோகம் அது முப்பது நாள்
PS: ஆசை அது அறுபது நாள்
PS: சோழன் மகனைச் சுமந்த வண்ணம் வாழும் எனது உள்ளம்
அவன் பொன்னி நதியைப் போல இந்த கன்னி நதியின் வெள்ளம்
MKM: ஏந்த வேண்டும் ஆசை தீர நீந்த வேண்டும் கண்ணே
ஏந்த வேண்டும் ஆசை தீர நீந்த வேண்டும் கண்ணே
நான் முத்திரை போடும் மேனி அழகு பத்தரை மாற்றுப் பொன்னே
PS: மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள்
MKM: மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள்
Lyrics in English
MKM: Moham Athu Muppathu Naal Asai Athu Arupathu Naal
MKM: Moham Athu Muppathu Naal Asai Athu Arupathu Naal
Idhayam Kalantha Kadhal Endral Puthiyathai Thondrum Ovoru Naal
Moham Athu Muppathu Naal Asai Athu Arupathu Naal
PS: Paruva Kaala Mazhaiyai Polum Ilamai Kaanum Uravu
Antha Mazhaiku Pinnal Thoovanam Pol Muthumai Kaala Ninaivu
MKM: Kumariyaga Irukumpothu Koodal Enbathu Inikum
Antha Inibu Endrum Kasapathillai Paadiyagum Varaikum
PS: Moham Athu Muppathu Naal Asai Athu Arupathu Naal
MKM: Oorum Thenai Moodi Vaithathu Udhatu Ennum Kathavu
Athil Unaku Paathi Enaku Paathi Eduthu Kolla Udhavu
PS: Asai Kadalil Aada Vanthathu Azhagu Ennum Padagu
Athil Mithakumpothu Mayakam Vanthathai Purinthu Kondathu Piragu
MKM: Moham Athu Muppathu Naal
PS: Asai Athu Arupathu Naal
PS: Chozlan Maganai Sumantha Vannam Vazhum Enathu Ullam
Avan Ponni Nathiyai Pola Intha Kanni Nathiyin Vellam
MKM: Yentha Vendum Aasai Theera Neentha Vendum Kanne
Yentha Vendum Aasai Theera Neentha Vendum Kanne
Naan Muthirai Podum Meani Azhagu Patharai Maatru Ponne
PS: Moham Athu Muppathu Naal Asai Athu Arupathu Naal
MKM: Moham Athu Muppathu Naal Asai Athu Arupathu Naal
Song Details |
|
---|---|
Movie Name | Anaiya Vilakku |
Director | Krishnan, Panju |
Stars | Mu.Ka. Muthu, Srikanth, Padmapriya |
Singers | P. Susheela, Mu.Ka.Muthu |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***