Wednesday, May 12, 2021

Thiru Mangalyam Kollum Song lyrics in Tamil

 Thiru Mangalyam Kollum Song lyrics in Tamil

ராமா ராமா ராமா
திருமாங்கல்யம் கொள்ளும் முறை இல்லையோ
உள்ளம் அறியாத மாங்கல்யம் தவறில்லையோ

திருமாங்கல்யம் கொள்ளும் முறை இல்லையோ
உள்ளம் அறியாத மாங்கல்யம் தவறில்லையோ
கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா
கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா
ஏற்கவோ எடுக்கவோ நீயே சொல் ராமா ராமா ராமா

மணமேடை மீது அணியாதபோதும் மாங்கல்யம் என்றும் புனிதம்
மனதாலும் அவனை நினையாதபோதும் அவன் தந்த தாலி அமுதம்
கழற்றினாலும் இதை அகற்றினாலும் இனி கன்னியாவதில்லை மகளே
கணவன் என்றவன் ஆனப் பின்பு இதைக் காக்க வேண்டும் குலமகளே

அன்னை ஜானகியே அந்த ராமப்பிரான் தந்த தாலியல்ல இந்த தாலி
அன்னை ஜானகியே அந்த ராமப்பிரான் தந்த தாலியல்ல இந்த தாலி
இது ஆத்திரத்தில் வந்த அவசரத்தில் என்னை சிறையிடவே வந்த வேலி
இதைத் தாங்கிக் கொண்டால் நான் பாவி
கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா
திருமாங்கல்யம் கொள்ளும் முறை இல்லையோ
உள்ளம் அறியாத மாங்கல்யம் தவறில்லையோ
கண்ணை மூடிக் கட்டும் தாலி சதமா இந்தக் கல்யாணம் உனக்கே சம்மதமா

மலர் மாலைதனை சிலை மீது சூடி வழிப்பாடு செய்யும் குலமே
சிலைதனைக் கேட்டு ஒருபோதும் அந்த மலர் சூடவில்லை மனமே
ஒருவன் அணிவதென்ன ஒருத்தி பெறுவதென்ன முடிந்து போன கதை மகளே
அவனை நீங்கி நீ வாழ்ந்தபோதும் இனி இதனை நீக்குவது தவறே

இவள் யாருக்கென்றே அந்த தேவனவன் விதி வகுத்து விட்டான் அந்த நாளில்
அதை மாற்றிடவோ இல்லை மறுத்திடவோ வழியில்லையம்மா இந்த நாட்டில்
இது தாயின் வழி வந்த பண்பு

இந்த பண்பாடு மாறதது அது உன்னோடு முடியாதது
இந்த மண்ணோடு உறவானது

Lyrics in English

Raamaa raamaa raamaa
Thirumangalyam kollum murai illaiyo Ullam ariyaadha maangalyam thavarillaiyo

Thirumangalyam kollum murai illaiyo Ullam ariyaadha maangalyam thavarillaiyo
Kannai moodi kattum thaali chadhamaa Indha kalyaanam unakke sammadhamaa
Kannai moodi kattum thaali chadhamaa Indha kalyaanam unakke sammadhamaa
Yerkavo edukkavo neeyae sol Raamaa raamaa raamaa

Manamedai meedhu aniyaadhapodhum Maangalyam endrum punidham
Manadhaalum avanai ninaiyaadhapodhum Avan thandha thaali amudham
Kazhatrinaalum adhai agatrinaalum ini Kanniyaavadhillai magalae
Kanavan endroruvan aana pinbu idhai Kaakka vaendum kulamagalae

Annai janakiyae andha raamapiraan Thandha thaaliyalla indha thaali
Annai janakiyae andha raamapiraan Thandha thaaliyalla indha thaali
Idhu aathirathil vandha avasarathil Ennai siraiyidavae vandha vaeli
Idhai thaangi kondaal naan paavi
Kannai moodi kattum thaali chadhamaa Indha kalyaanam unakke sammadhamaa
Thirumangalyam kollum murai illaiyo
Ullam ariyaadha maangalyam thavarillaiyo
Kannai moodi kattum thaali chadhamaa Indha kalyaanam unakke sammadhamaa

Malar maalaithannai silai meedhu soodi Vazhipaadu seiyum kulamae
Silaithannai kettu orupodhum andha Malar poodavillai manamae
Oruvan anivadhena oruththi peruvadhena Mudindhu pona kadhai magalae
Avanai neengi nee vaazhndhapodhum Ini idhanai neekkuvadhu thavarae

Ival yaarukkendrae andha devanavan Vidhi vaguththu vittaan andha naalil
Adhai maatridavo illai maruthidavo Vazhi illaiyammaa indha naattil
Idhu thaayin vazhi vandha panbu

Indha panpaadu maaradhadhu Adhu unnodu mudiyaadhadhu
Indha mannodu uravaanadhu

Song Details

Movie Name Thirumangalyam
Director A. Vincent
Stars R. Muthuraman, Jayalalitha, Sivakumar, Lakshmi, Nagesh, Srikanth, Sukumari, Sachu
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***