Tuesday, January 19, 2021

Neengal Athanai Perum Song lyrics in Tamil

 Neengal Athanai Perum Song lyrics in Tamil

நீங்கள் அத்தனை பேரும்  உத்தமர் தானா சொல்லுங்கள்
நீங்கள் அத்தனை பேரும்  உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் ஹேஹே
உள்ளவரெல்லாம் நல்லவராவார் இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே 
பின்னே நன்மை தீமை என்பது என்ன பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே
நீங்கள் அத்தனை பேரும்  உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்

அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்
சதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன்
கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே கோவிலை இடிப்போன்
சாமியைப் போலே வாழ்கின்றான்
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே ஊரை ஏய்ப்பவன்
உத்தமன் போலே காண்கின்றான்
நீங்கள் அத்தனை பேரும்  உத்தமர் தானா சொல்லுங்கள்

சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலைமாறி ஆடும் இன்று அதிகார ஆட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது புரியாது எதிர்காலம் காட்டும்
நாடக வேஷம் கூட வராது நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்
பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில் பாவம் செய்தவன்
தலைமுறை வரையில் பார்க்கின்றேன்
நீங்கள் அத்தனை பேரும்  உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
நீங்கள் அத்தனை பேரும்  உத்தமர் தானா சொல்லுங்கள்

Lyrics in English

Neengal Athanai Perum Uthamar Thana Sollungal
Neengal Athanai Perum Uthamar Thana Sollungal
Ungal Asai Nenjai Thottu Parthu Kollungal Ho ho
Ullavarellam Nallavaravar Illathavare Pollathavaram Boomiyile
Pinne Nanmai Theemai Enbathu Enna Paava Punniyam Enbathu Enna Pathaiyile
Neengal Athanai Perum Uthamar Thana Sollungal
Ungal Asai Nenjai Thottu Parthu Kollungal

Azhagaga Thondrum Oru Karunagam Kanden
Aniyayam Seipavarukum Mariyathai Kanden
Sathikara Kootam Ondru Sabaiyera Kanden
Thavarendru Ennai Sollum Parithapam Kanden
Kollaiyadipavan Vallalai Pole Kovilai Idipavan
Samiyai Pole Vazhgintran
Oolal Seipavan Yokiyan Pole Orai Yeipavan
Uthaman Pole Kaangintran
Neengal Athanai Perum Uthamar Thana Sollungal

Sattathin Pinnal Nindru Sathiradum Kootam
Thalaimari Adum Indru Athikara Aattam
Entraikum Melidathil Ivar Meethu Nootam
Ippothu Puriyathu Edhirkalam Kaatum
Naadaga Vesaham Koodavarathu Nalaiya Ulagam Ivaraividathu Solginren
Pala Naal Thirudan Oru Naal Siraiyil Paavam Seithavan
Thalaimurai Varaiyil Parkintren
Neengal Athanai Perum Uthamar Thana Sollungal
Ungal Asai Nenjai Thottu Parthu Kollungal
Neengal Athanai Perum Uthamar Thana Sollungal

Song Details

Movie Name En Magan
Director C.V. Rajendran
Stars Sivaji Ganesan, Manjula, K. Balaji, Roja Ramani, V.K. Ramasamy, Manorama
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***