Tuesday, January 26, 2021
Jeyichutte Kanna Nee Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/26/2021
Jeyichutte Kanna Nee Song lyrics in Tamil
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே
தொறந்துட்டே கண்ண தொறந்துட்டே
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே
உன்னிடத்தில் தோற்றத்தில் வெற்றி எனக்கு
கண்ணா நான் யார் கிட்ட டா தோத்தேன் சாதாரண மனுஷன் கிட்டயா
உன்னிடத்தில் தோற்றத்தில் வெற்றி எனக்கு
என்னை தெளிய வைத்தாய் தன்னை புரிய வைத்தாய் என் நன்றி உனக்கு
கண்ணா ஜெயிச்சுட்ட டா நீ
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்ட டா
சூரியனைப் பார்த்து இந்த நாய் குலைத்தது
உன் சூடு பட்டு கேடு கெட்டு வாய் அடைத்தது
அகந்தை பிடித்த சிறு குழந்தை பிடித்த பிடிவாதம் தீர்ந்ததிங்கு பாரடா
உன்னை வென்று நின்றவன் யாரடா
கண்ணா உன் நாடகத்தில் நானொரு பாத்திரம்
உனக்கு முன்னாடி நான் எம்மாத்திரம்
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்ட டா
எட்டடுக்கு கட்டிடத்தில் ஒன்பது ஓட்டை
இதில் நல்ல ரத்தம் உள்ள மட்டும் எத்தனை சேட்டை
கண்ணா சக்தி இருந்தப்ப புத்தியில்லை புத்தி இருக்கிறப்போ சக்தி இல்லை
கொண்டு வந்தென்ன கொண்டு செல்வதென்ன ஒன்றுமில்லையே முடிவிலே
இதை உணர்ந்த பிள்ளை உன் மடியிலே
கண்ணா நீதாண்டா ஜெயிச்சே
ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்ட டா
ஆணவத்தை விட்டொழித்தேன் ஓடிவருக
கண்ணா நானிருக்கும் வாசலை நீ தேடி வருக
கண்ணா நானொரு பைத்தியக்காரன்
நீ வேறு நான் வேறுன்னு நெனச்சப்ப நீ வந்தே
நீ என் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறப்போ எப்படி வருவே
ஆணவத்தை விட்டொழித்தேன் ஓடிவருக
கண்ணா நானிருக்கும் வாசலை நீ தேடி வருக
தன்னையறிந்தவர்க்கு தானாகி நிற்பவனே
என்னையறிந்துக் கொண்டேன் மன்னனே
எனக்குள் கீதை எடுத்துரைத்த கண்ணனே
கண்ணா கண்ணா கண்ணா
Lyrics in English
Jeyichutte Kanna Nee Jeyichutte
Thoranthute Kannai Thoranthuthe
Jeyichutte Kanna Nee Jeyichutte
Unnidathil Thottrathl Vetri Enaku
Kanna Naan Yar Kittada Thoththen Satharana Manusan Kittaya
Unnidathil Thottrathl Vetri Enaku
Ennai Thealiya Vaithai Thannai Puriya Vaithai En Nandri Unaku
Kanna Jeyichutte Da Nee
Jeyichutte Kanna Nee Jeyichutte
Sooriyanai Parthu Intha Naai Kulaithathu
Un Soodu Pattu Keadu Kettu Vai Adaithathu
Aganthai Piditha Siru Kuzhanthai Piditha Pidivatham Theernthingu Parada
Unnai Vendru Nintravan Yarada
Kanna Un Nadagathil Nanoru Pathiram
Unaku Munnadi Naan Emmathiram
Jeyichutte Kanna Nee Jeyichutte
Ettaduku Kattitathil Onpathu Otai
Idhil Nalla Ratham Ulla Mattum Ethanai Settai
Kanna Sakthi Irunthappa Puthi Illai Puthi Irukirappo Sakthi Illai
Kondu Vanthathenna Kondu Selvathenna Ondrumillaiye Mudivile
Ithai Unarntha Pillai Un Madiyile
Kanna Neethanda Jeyichutte
Jeyichutte Kanna Nee Jeyichutte
Aanavathai Vittozhithen Odivaruga
Kanna Naanirukum Vasalai Nee Theadi Varuga
Kanna Nanoru Paithiyakaran
Nee Veru Naan Verunnu Nenaichappo Nee Vanthe
Nee En Nenjukulleye Irukirappo Eppadi Varuve
Aanavathai Vittozhithen Odivaruga
Kanna Naanirukum Vasalai Nee Theadi Varuga
Thannaiyarinthavarku Thaanagi Nirpavane
Ennaiyarinthu Konden Mannane
Enakul Geethai Eduthuraitha Kannane
Kanna Kanna Kanna
Song Details |
|
---|---|
Movie Name | Kaliyuga Kannan |
Director | Krishnan, Panju |
Stars | Jaishankar, Sowcar Janaki, Jayachitra, Thengai Srinivasan |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***