Tuesday, May 12, 2020
Seethakkalappa Senthamarai Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/12/2020
Seethakkalappa Senthamarai Song Lyrics in Tamil
சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
முப்பழ நுகரும் மூஷிக வாகன இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டி
தாயா யெனக்குத் தானெழுந்தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்து
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளி
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறிவித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலியதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் எண் முகமாக இனிதெனக் கருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்து
அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
எல்லை யில்லா ஆனந் தம்அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே
Song Details |
|
---|---|
Movie | Namma Kuzhandaigal |
Stars | Major Sundarrajan, Pandari Bai, Vennira Aadai Nirmala |
Singers | Seerkazhi Govindarajan |
Lyrics | |
Musician | M.S. Viswanathan |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***