Wednesday, May 20, 2020

Sakunthalai Dushyanthan Song Lyrics in Tamil

Sakunthalai Dushyanthan Song Lyrics in Tamil

SG: காளிதாச மஹாகவி காவியம்
Chorus: காளிதாச மஹாகவி காவியம்
SG: கன்னி சகுந்தலை என்னும் ஓவியம்
Chorus: கன்னி சகுந்தலை என்னும் ஓவியம்
SG: காட்டின் நடுவிலோர் குடிலில் வாழ்ந்தவள்
கண்வ மகரிஷி செல்லப் பெண்ணவள்
Chorus: கண்வ மகரிஷி செல்லப் பெண்ணவள்

SG: தோழிகள் எனும் மான்கள் நடுவிலே தூய மானெனப் பள்ளி கொண்டனள்
PL: வனத்து மான் தன்னை துரத்தி வந்தவன் மன்னன் துஷ்யந்தன் மானக் கண்டனன்
SG: அந்த மானை மறந்து கோமகன் இந்த மான் மகள் அழகில் ஆழ்ந்தனன்
PL: மலர்களில் ஒரு மலரைப் போலவள் மறைந்து நின்றவள் வதனம் நோக்கினள்
Both: இலை மறைந்தவள் இதய வீணையில் இளைய மன்னவன் இசை கலந்தனன்
Chorus: இசை கலந்தனன்

PL: கண்ணோடு கண்ணினை நோக்கிய நோக்கில் காவலன் தனை மறந்தான் ஆஆ
கண்ணோடு கண்ணினை நோக்கிய நோக்கில் காவலன் தனை மறந்தான்
காதல் வயப்பட்டு மாது துடித்ததில் கைவளை தனை இழந்தாள்
Chorus: கைவளை தனை இழந்தாள்

SG: மாறன் தொடுத்த கணைகளினாலவள் மன்னனுடன் கலந்தாள் ஆஆ
மாறன் தொடுத்த கணைகளினாலவள் மன்னனுடன் கலந்தாள்
மஞ்சள் முகத்திரு வஞ்சிதனக்கவன் காதல் விருந்தளித்தான்
SG, Chorus: காதல் விருந்தளித்தான்

PL: அந்திபடும் பொழுதானதினால் அவர் அங்கம் பிரிந்திருந்தார்
அன்னம் தனக்கொரு சின்னம்தனை அவன் அன்புடனே அணிந்தான்
Chorus: அன்புடனே அணிந்தான்

PL: சிந்தையிலிருந்து தேகம் பிரிந்தது சென்றனன் மன்னவன் தான்
Chorus: ஆஆ
PL: செவ்வரியோடிய கண்களினோடவள் சிந்தனையில் விழுந்தாள்
Chorus: அவனே நினைவானாள் அவனே கனவானாள்
PL: அமைதியில் தனியானாள்

SG: துடிக்கின்ற சினமே தன் துணையாய்க் கொண்ட துர்வாச முனியன் தன் தவமுடித்து
கொடிக்கன்று நின்றிருக்கும் சோலை வந்தான் குரல் தந்தான்
யாரங்கே அங்கே யாரங்கே யாரங்கே யாரங்கே

SG: எந்த எண்ணம் உனைக் கொண்டதோ அதனை இன்று தீர்த்து விடுகின்றேன்
அந்த மன்னவனின் உள்ளம் என்பதனை இன்று மாற்றி விடுகின்றேன்
என்னாளுமவன் சொந்தமாவதில்லை தீர்த்தம் அள்ளி இடுகின்றேன்
எந்த ஞாபகமும் மறந்து போவென இன்று சாபமிடுகின்றேன்
மறந்து போ துஷ்யந்தா இவளை மறந்து போ

Lyrics in English

SG: Kalithasa Mahakavi Kaviyam
Chorus: Kalithasa Mahakavi Kaviyam
SG: Kanni Sagunthalai Ennum Oviyam
Chorus: Kanni Sagunthalai Ennum Oviyam
SG: Kaattin Naduvilor Kudilil Vazanthaval
Kannva Maharishi Sella Pennaval
Chorus: Kannva Maharishi Sella Pennaval

SG: Thozligal Enum Maangal Naduvile Thuya Maanena Palli Kondanal
PL: Vanathu Maan Thannai Thurathi Vanthanan Mannan Thushyanthan Maana Kandanan
SG: Antha Maanai Maranthu Komagan Intha Maan Magal Azhagil Aalnthanan
PL: Malargalil Oru Malarai Polaval Marainthu Nintraval Vathanam Nokinal
Both: Ilai Marainthaval Idhaya Veenaiyil Ilaiya Mannavan Isai Kalanthanan
Chorus: Isai Kalanthanan

PL: Kannodu Kanninai Nokiya Nokkil Kavalan Thanai Maranthan Ah ah
Kannodu Kanninai Nokiya Nokkil Kavalan Thanai Maranthan
Kadhal Vayapattu Maadhu Thudithathil Kaivalai Thanai Izanthal
Chorus: Kaivalai Thanai Izanthal

SG: Maaran Thodutha Kanaikalinaalaval Mannanudan Kalanthal Aha ah
Maaran Thodutha Kanaikalinaalaval Mannanudan Kalanthal
Manjal Mugathiru Vanjithanakavan Kadhal Virunthalithan
SG, Chorus: Kadhal Virunthalithan

PL: Anthipadum Pozhuthanathinal Avar Angam Pirinthiruthar
Annam Thanakoru Chinnamthanai Avan Anbudane Aninthan
Chorus: Anbudane Aninthan

PL: Sinthaiyilirunthu Degam Pirinthu Sentranan Mannavan Thaan
Chorus: Aha
PL: Sevvariyodiya Kannkalinodaval Sinthanaiyil Vizhunthal
Chorus: Avane Ninaivanal Avane Kanavanal
PL: Amaithiyil Thaniyanal

SG: Thudikindra Sinme Than Thunaiyai Konda Thurvasha Muniyan Than Thavamudithu
Kodikkandru Nintrirukum Solai Vanthan Kural Thanthan
Yarange Ange Yarange Yarange Yarange

SG: Entha Ennam Unai Kondatho Athanai Indru Theerthu Vidukintren
Antha Mannavanin Ullam Enpathanai Indru Maatri Vidukintren
Ennaalumavan Sonthamavathillai Theertham Alli Idukintran
Entha Nyapagamum Maranthu Povena Indru Saabamidukintren
Maranthu Po Thushyantha Ivalai Maranthu Po

Song Details

Movie Engirundho Vandhaal
Stars Sivaji Ganesan, Jayalalithaa, K. Balaji, Devika, Nagesh, Rama Prabha, Sachu
Singers Seerkazhi Govindarajan, P. Leela, Chorus
Lyrics Kannadasan
Musician M. S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***