Sunday, March 1, 2020

Panaimaram Thennaimaram Vaazhaimaram Tamil Song Lyrics in Tamil

பனைமரம் தென்னைமரம் வாழைமரம் மக்கள் பழகும் பழக்கத்திற்கு மூன்று மரம்
பனைமரம் தென்னைமரம் வாழைமரம் மக்கள் பழகும் பழக்கத்திற்கு மூன்று மரம்
பனைமரம் தென்னைமரம் வாழைமரம்

பனை மரத்திற்கு ஒருதரம் தண்ணீர் பாய்ச்சு விட்டால் போதும்
அதுதனை வளர்த்து தலையில் நுங்கினை தந்து விளையாடும்
தென்னை மரத்துக்கு தினசரி கொஞ்சம் தீர்த்தம் விட வேணும்
அந்த தீர்த்தம் இளநீரை சேர்த்து கொண்டு வரும் காத்திருக்க வேணும்
வாழை மரத்துக்கு அடிக்கடி தண்ணீர் வார்த்த பின்னாலடியோ
வாழை மரத்துக்கு அடிக்கடி தண்ணீர் வார்த்த பின்னாலடியோ
அது பூவை பழத்தை இலையை கொடுப்பது போட்டக் கடனடியோ
பனைமரம் தென்னைமரம் வாழைமரம் மக்கள் பழகும் பழக்கத்திற்கு மூன்று மரம்
பனைமரம் தென்னைமரம் வாழைமரம்

மக்களிலே பனை தென்னை வாழை என மூன்று வகைகள் உண்டு
அவர் நன்றியிலும் செய்யும் நன்மையிலும் இந்த மூன்று விதங்கள் உண்டு
அது பனைமரம் தென்னைமரம் வாழைமரம்

நல்ல உறவுகள் என்றோ செய்ததை ஞாபகம் வைத்திருக்கும்
அது நல்லது செய்திட நேரத்திலே வந்து வாசலில் காத்திருக்கும்
தலை வாசலில் காத்திருக்கும் அது என்ன மரம் அது பனைமரம்
சின்ன உறவுகள் கொடுக்கும் கையை தினம் எதிர்பார்க்கும்
நாம் செய்து செய்து அலுத்தப்பின்னே அது நம்மை காக்கும்
அது என்ன மரம் அது தென்னைமரம்
தீய உறவுகள் என்னக் கொடுத்தும் திருப்தி கொள்வதில்லை
நாம் திரும்ப திரும்ப அள்ளிக் கொடுத்தால் கை விடுவதில்லை
அது என்ன மரம் அது வாழைமரம்
இந்த மரத்தில் எந்த மரத்தை சொந்தம் கொள்வீரோ
நீங்கள் எந்த மரத்தை போல் இருந்து நன்றி கொள்வீரோ
நீங்கள் என்ன மரம் நாங்கள் பனைமரம்

Lyrics in English

Panaimaram Thennaimaram Vaazhaimaram makkal pazhagum pazkakkaththukku moonu maram
Panaimaram Thennaimaram Vaazhaimaram makkal pazhagum pazkakkaththukku moonu maram
Panaimaram Thennaimaram Vaazhaimaram

Panaimaraththukku oru tharam thanneer paaychchi vittaal podhum
Adhu thanai valarththu thalaiyil nunginaith thandhu vilaiyaadum
Thennai maraththukku dhinasari konjam theerththam vida vaenum
Andha theerththam ilaneerai saerththuk kondu varum kaaththirukka vaenum
Vaazhai maraththukku adikkadi thanneer vaarththa pinnaaladiyo
Vaazhai maraththukku adikkadi thanneer vaarththa pinnaaladiyo
Adhu poovaip pazhaththai ilaiyaik koduppadhu potta kadanadiyo
Panaimaram Thennaimaram Vaazhaimaram

Makkalilae panai thennai vaazhai ena moondru vagaigalundu
Avar nandriyilum seiyum nanmaiyilum indha moondru vidhangalundu adhu
Adhu Panaimaram Thennaimaram Vaazhaimaram

Nalla uravugal endro seydhadhai njaabagam vaiththirukkum
Adhu nalladhai seidhida naeraththilae vaasalil kaaththirukkum
Thalai vaasalil kaaththirukkum adhu enna maram adhu Panaimaram
Sinna uravugal kodukkum kaiyai dhinam edhirpaarkkum
Naam seidhu seidhu aluththa pinbae adhu nammaik kaakkum
Adhu enna maram adhu Thennaimaram
Theeya uravugal enna koduththum thirupthi kolvadhillai
Naam thirumbath thirumpa allik koduththaal kai viduvadhillai
Adhu enna maram adhu Vaazhaimaram
Indha maraththil endha maraththai sondham kolveero
Neengal endha maraththaip pol irundhu nandri kolveero
Neenga enna maram naanga Panaimaram

Song Details

Movie Kulavilakku
Hero Geminiganesan
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***