Sunday, November 3, 2019

Iraivan Irukkindrana Manithan Song lyrics in Tamil

Iraivan Irukkindrana Manithan Song lyrics in Tamil

TMS: இறைவன் இருக்கின்றானா
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

PS: மனிதன் இருக்கின்றானா
மனிதன் இருக்கின்றானா இறைவன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை

PS: கண்ணிலே உறுதியில்லை காதலுக்கோர் நீதியில்லை
ஒரு நாள் இருந்த மனம் மறுநாள் இருப்பதில்லை
குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது
கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது
மனிதன் இருக்கின்றானா

TMS: பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி
இறைவன் இருக்கின்றானா

PS: ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார்
இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதர் என்றால் இயற்கையும் நின்றுவிடும்
மனிதன் இருக்கின்றானா

TMS: சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை
சத்தியத்தைக் காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை
வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை
மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை
இறைவன் இருக்கின்றானா
PS: மனிதன் இருக்கின்றானா
TMS: இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்
PS: அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்
எங்கே வாழ்கிறான்

Lyrics in English

TMS: Iraivan irukkinraanaa
iraivan irukkinraanaa manidhan ketkiraan
avan irunthaal ulagaththile engge vaazhgiraan
engge vaazhgiraan
naan aasthiganaanen avan agappadavillai
naan naasthiganaanen avan bayappadavillai

PS: manithan irukkinraanaa
manithan irukkinraanaa iraivan ketkiraan
avan irunthaal ulagaththile engge vaazhgiraan
engge vaazhgiraan
naan anbu kaatinen avan aatkolla villai
intha thunbam thiirkkave avan thunai vara villai

PS: Kannilea uruthi illai kaadhalukoor Neethi illai
oru naal iruntha manam marunaal erupathillai
kudisaiyil Or manathu kopurathil Or manathu
koodatha serkai yellam koodinaal pala manathu
manithan irukkinraanaa

TMS: paarpavan kurutanadi padipavan moodanadi
ullathai sollpavane ulagathil pithanadi
neero kothikuthadi nerupo kulirithadi
venmaiyai karumai entru kannadi kaaduthadi
iraivan irukkindrana

PS: ontraiye ninaithirunthum ontraga valnthirunthum
pennaga piranthavarai kannaga yaar ninaithaar
irunthal iruntha idam illaiyel maranthu vidum
ivarthaan manithar entral eiyarkaiyum nitruvidum
manithan irukkinraana

TMS: santhegam piranthu vittal sathiyamum palipathillai
santhiyathai kaapavanum satchi solla varuvathillai
vazhakum mudiyavillai manitharin theerpum illai
manithanai maranthu vittu vazhpavan iraivan illai
iraivan irukkindrana
iraivan irukkindrana
PS: manithan irukkindrana
TMS: iraivan irukkinraanaa manidhan ketkiraan
PS: avan irunthaal ulagaththile engge vaazhgiraan
engge vaazhgiraan

Song Details

Movie Avan Pithana
Singers T.M. Soundarajan, P.Susheela
lyrics Kannadasan
Musician R. Parthasarathy
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***