Monday, November 4, 2019

Kizhakku Veluthathadi Song lyrics in Tamil

Kizhakku Veluthathadi Song lyrics in Tamil

PS: கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி
எங்கள் குடும்பம் இன்று ஏறெடுத்து நடந்ததடி
இன்று வந்த தென்றலுக்கு இதயமெல்லாம் சிவந்ததடி
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி

PS: ஓடிய மேகம் இன்று மழையாக பொழிந்ததடி
ஊரார்க்கு கிடைக்கும் என்று ஊரணியில் விழுந்ததடி
காடு சென்ற மாடப்புறா வீடு வந்து சேர்ந்ததடி
வீடு வந்த மகிழ்சியிலே விழாக்கோலம் கொண்டதடி
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி

TMS: வானமே வையமே நீ தந்த வளமெல்லாம்
மானிடர் உரிமையம்மா
நான் என்று சொல்வதை நாம் என்று சொல்வதால்
நாடெல்லாம் வாழுமம்மா
பொழுதெல்லாம் உழைக்கின்ற ஏழையின் முகத்திலே
புன்னகை வளருமம்மா புன்னகை வளருமம்மா

TMS: கிழக்கு வெளுத்ததம்மா கீழ்வானம் சிவந்ததம்மா
கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததம்மா
எங்கள் குடும்பம் இன்று ஏரெடுத்து நடந்ததம்மா
இன்று வந்த தென்றலுக்கு இதயமெல்லாம் சிறந்ததம்மா
கிழக்கு வெளுத்ததமம்மா கீழ்வானம் சிவந்ததமம்மா

PS: நல்லவர்க்கு நல்லதெல்லாம் நடப்பதுதான் நீதியடி
இல்லாமல் மாறிவிட்டால் எந்த உயிர் வாழுமடி
பல்லாண்டு பாடுங்கடி பறவைகள் போல் ஆடுங்கடி
பதினாறு பெருவாழ்வும் வருகவென்றே கூறுங்கடி
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி

Lyrics in English

PS: Kizhakku Veluthathadi keelvaanam sivanthathadi
kadhiravan varavu kandu kamala mugam malarnthathadi
enggal kudumpam inru ereduththu nadanthathadi
inru vantha thenralukku idhayamellam sivanthadhadi
Kizhakku Veluthathadi keelvaanam sivanthathadi
kadhiravan varavu kandu kamala mugam malarnthathadi

PS: Odiya megam inru mazaiyagap pozinthathadi
urarkkuk kidaikkum enru uraniyil vizunthathadi
katu senra madappura vIdu vanthu sernthathadi
vIdu vantha magizssiyile vizak kolam kondathadi
Kizhakku Veluthathadi keelvaanam sivanthathadi
kadhiravan varavu kandu kamala mugam malarnthathadi

TMS: vaname vaiyame nI thantha valamellam
maanidar urimaiyamma
nan enru solvadhai nam enru solvathal
nadellam vazumamma
pozudhellam uzaikkinra ezaiyin mugaththile
punnagai malarumamma punnagai malarumamma

TMS: kizakku veluththathamma keelvaanam sivanthathamma
kadhiravan varavu kandu kamala mugam malarnthathamma
enggal kudumbam inru ereduththu nadanthathamma
inru vantha thenralukku idhayamellam siranthathamma
kizakku veluththathamma keelvaanam sivanthathamma

PS: nallavarkku nalladhellam nadappadhuthan nIdhiyadi
illamal marivittal entha uyir vazumadi
pallandu padungkadi paravaigal pol adunggadi
pathinaru peruvazvum varugavenre kurunggadi
Kizhakku Veluthathadi keelvaanam sivanthathadi
kadhiravan varavu kandu kamala mugam malarnthathadi

Song Details

Movie Avan Pithana
Singers T.M. Soundarajan, P.Susheela
lyrics Kannadasan
Musician R. Parathasarathy
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***