Monday, August 19, 2019

Malargalai Pol Thangai Song Lyrics in Tamil

Malargalai Pol Thangai Song Lyrics in Tamil

மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்
மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்

மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றான்

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையில் பொன்வண்ணம் கண்டான்
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையில் பொன்வண்ணம் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிட கண்டான்

மாவிலை தோரணம் ஆடிட கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்
அன்புடன் கால்களில் பணிந்திட கண்டான்

வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில் ஆட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்

மாமனை பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தம்மில் மாமன் தெய்வம் கண்டான்
மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அவன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றான்
கற்பனை தேரினில் பறந்து சென்றான்
பறந்து சென்றான் பறந்து சென்றான் பறந்து சென்றான்

Lyrics in English

Malargalai Pol Thangai Urangugiraal
Annan Vazha Vaipaan Endru Amaidhi Kondaal
Kalaindhidum Kanavugal Aval Padaithal
Annan Karpanaith Thaerinil Parandhu Sendraan
Maamani Maaligai Maadhargal Punnagai
Mangala Maedayin Ponvannam Kandaan
Maamani Maaligai Maadhargal Punnagai
Mangala Maedayin Ponvannam Kandaan
Maavilaith Thoranam Asaindhidak Kandaan
Maavilaith Thoranam Asaindhidak Kandaan
Manamagan Vandhu Nindru Maalai Sooda Kandaan
Kalaindhidum Kanavugal Aval Padaithal
Annan Karpanaith Thaerinil Parandhu Sendraan
Aasayin Padhayil Odiya Penn Mayil
Anbudan Kaalgalil Panindhida Kandaan
Vaazhiya Kanmani Vaazhiya Endraan
Vaan Mazhai Pol Kangal Neeril Aadakkandaan

Kalaindhidum Kanavugal Aval Padaithal
Annan Karpanaith Thaerinil Parandhu Sendraan

Poomanam Kondaval Paal Manam Kandaal
Pongidum Thaimayil Seyudan Nindraal
Poomanam Kondaval Paal Manam Kandaal
Pongidum Thaimayil Seyudan Nindraal

Maamanai Paaradi Kanmani Endraal
Marumagan Kangal Thammil Maaman Dheivam Kandaan

Malargalai Pol Thangai Urangugiraal
Annan Vazha Vaipaan Endru Amaidhi Kondaal
Kalaindhidum Kanavugal Aval Padaithal
Annan Karpanaith Thaerinil Parandhu Sendraan

Song Details

Movie Pasamalar
Singer T.M. Soundarajan
Lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1961

1 comment :

  1. மருமகள் கண்கள் 'தன்னில்'
    என்பது தவறு; கண்கள் 'தம்மில்' என்பதே சரி.
    நன்றி.

    ReplyDelete

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***